Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரொன்றினுள் இருந்த பொம்மையொன்றை குழந்தையென நினைத்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அதை வெயில் வெப்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காக காரின் கண்ணாடியை உடைத்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
செனல் கிறிஸ்டோபிஸ் என்ற 5 வயது சிறுமி, குழந்தை போன்று தோற்றமளிக்கும் தனது பொம்மையை தனது தந்தையின் காரில் வைத்துவிட்டு பாடசாலைக்கு சென்றாள். இச்சிறுமியின் தந்தை அவளை பாடசாலையில் இறக்கிவிட்டு அவரது தொழில்புரியும் கடைக்குச் சென்று விட்டார்.
வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த காரை கடந்து சென்றவர்கள் குழந்தையொன்று காரில் இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அங்கு விரைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 'குழந்தை' வெப்பத்தினால் இறந்துவிடலாம் எனக் கருதி காரின் கண்ணாடியை உடைத்து அதை வெளியே எடுத்தனர்.
செனலின் தந்தை அனஸ்டஸி (வயது 37) இது தொடர்பாக தெரிவிக்கையில், 'என்னால் இதனை நம்ப முடியவில்லை. பொலிஸார் பொம்மையை கைகளில் பிடித்துக்கொண்டு அதை மீண்டும் காரில் விட்டுவிட்டு செல்ல வேண்டாம் என தெரிவித்தனர்' என்றார்.
செனலின் பிறந்த தினத்திற்காக அவளின் தாய் விக்டோரியா வயது 25, 100 ஸ்ரேலிங் பவுண் விலையுள்ள இந்த பொம்மையை வாங்கிக் கொடுத்தாராம்.
ஏன் இவ்வாறு பொலிஸார் செய்தார்களென என்னால் நம்பமுடியாமல் உள்ளது. அது உண்மையான குழந்தையென்றால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பார்கள் என விக்டோரியா கூறியுள்ளார்.
rajab Thursday, 04 August 2011 07:49 PM
இது தேவையா இல்ல போதுமா ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
49 minute ago
1 hours ago