Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயிரக்கணக்கான மார்புக் கச்சைகளை இணைத்து புதிய சாதனையை நிலைநாட்ட பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி மேற்படி மார்புக்கச்சைகள் சிக்கிக்கொண்டதால் தோல்வியடைந்துள்ளது.
166,625 மார்புக் கச்சைகளை இணைத்து நிலைநாட்டப்பட்ட முந்தையை சாதனையை தம்மால் முறியடிக்க முடியுமென ஏற்பாட்டாளர்கள் நம்பினர். வோர்செஸ்டர் நகரிலுள்ள மைதானமொன்றில் 100 மைல் நீளத்திற்கு இந்த பிராக்களை இணைத்து காட்சிப்படுத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டனர்.
'இந்த மார்புக் கச்சைகளை மிகவும் நேர்த்தியாக பெட்டிகளில் அடைக்கப்பட்டவாறு கொண்டுவரப்பட்டன. ஆனால் அப்பெட்டிகளை பிரிக்கும்போது மார்புக் கச்சைகள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொண்டன. போதியளவவு விரைவாக அவற்றை வேறுபிரிக்க முடியவில்லை' என இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிராக்களை வேறு பிரிப்பதற்கு போதியளவு தொண்டர்கள் இருக்கவில்லை எனவும் 6-8 வாரங்களில் மேலுமொரு தடவை இச்சாதனைக்கு முயற்சிக்கப்போவதாகவும் பிரா செயின் குழு எனும் அமைப்பின் தலைவி கரென் டொமாலின் கூறினார்.
அறக்கட்டளையொன்றுக்கு நிதிதிரட்டுவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்காக பிராக்களை அன்பளிப்புச் செய்யுமாறு பொதுமக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கோரியிருந்தனர்.
mauni Wednesday, 03 August 2011 03:22 PM
ரொம்ப முக்கியம். அவங்கள் மார்புக் கச்சையை வைத்து என்ன செய்தால் நமக்கென்ன லாபம்? இந்த செய்தியால் யாருக்குகென்ன பயன்?
Reply : 0 0
mohamed jaleel i Wednesday, 03 August 2011 05:21 PM
ஆஹா இப்படியும் ஒரு சாதனையா?
Reply : 0 0
riyas Wednesday, 03 August 2011 08:17 PM
ஐயோ ஐயோ
Reply : 0 0
nakeeb adam Sunday, 07 August 2011 02:41 PM
நல்ல காலம் பிராவோட மட்டும் நின்டிடினம் ,கோவணம் தேடினால் என்ன ஆவது ?????????????????
Reply : 0 0
Nadodi Sunday, 07 August 2011 10:45 PM
Mr. maunl இந்த செய்தியால் யாருக்கும் எந்த பலனும் இல்லைதான்.. ஆனால் உலகில் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்தனே.. எதுக்கு வீண் பேச்சு?? அப்படி எண்டால் நாம் படிக்கும் செய்திகள் எல்லாத்திலும் நன்மையா அடைகின்றீர்கள்??
Reply : 0 0
SGS Sunday, 04 September 2011 05:53 AM
சப்பா .. முடியல.........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago