2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் இரகசிய கமெராக்கள்: மாணவிகள் அதிர்ச்சி

Kogilavani   / 2011 ஜூலை 30 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவில் மாணவிகள் இருவர், தாம் தங்கியிருந்த வீட்டின் அறைகளில் இரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை அவதானித்து அதிர்ச்சியுற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

புளோரிடா மாகாணத்திலுள்ள தொடர்மாடிக் கட்டிடமொன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல்கேரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கோடைக் காலத்தை கழிப்பதற்காக வந்த வான்யா அமோக்கோவரீவா (வயது 22) ரலிஸ்டா தாம்போவா (வயது 23) ஆகிய இரு பெண்களும் குறித்த தொடர் மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தங்கியுள்ளனர்.

இவர்கள் தங்கியிருந்த வீட்டின் குளியலறை உட்பட ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக குறித்த பெண்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் கமெராக்கள் மூலம் யாரோ அவதானித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இக்கருவிகள் புகை எச்சரிக்கைக்கான கருவிகளாக இருக்கும் என்றே இம்மாணவிகள் ஆரம்பத்தில் கருதியிருந்தனர். ஆனால் அவை கமெராக்கள் என்பதை அறிந்து அவர்கள் மிக அதிர்ச்சியடைந்துள்ளனர்.

'இது உண்மையில் பயங்கரமானது. இவ்வாறான சம்பவம் எனக்கும் எனது நண்பிக்கும் நடக்குமொன்று கொஞ்சமேனும் எதிர்பார்க்கவில்லை.

'நாங்கள் ஒரு கோடைப் பருவத்தை அமெரிக்காவில் கழிக்கவும் இங்கு வேலை செய்யவுமே வந்தோம்' என தாம்பஸோவோ தெரிவித்துள்ளார்.
இக்கமெராக்களை யார் பொருத்தினார்கள் என்பதை கண்டறிவதற்கு புலனாய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 31 July 2011 09:10 PM

    The third eye! Not only in rooms &apartments-
    GPS_ general position system, eyes eyes everywhere, no privacy, no where privacy!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .