2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

விபசாரிகளுக்காக வீதிகளில் 'செக்ஸ் பெட்டிகள்' அமைக்கும் சுவிஸ் அரசு

Kogilavani   / 2011 ஜூலை 19 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விபசாரிகள் தொல்லைகளின்றி அமைதியாக தமது 'சேவைகளை' முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக சுவிட்ஸர்லாந்து  அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவர்களுக்காக வீதிகளில் தொடர் பெட்டி வடிவிலான மறைப்புகளை அமைத்துக் கொடுத்துள்ளது சுவிஸ் அரசாங்கம்;. இதன் மூலம் விபசாரிகள் தமது நடவடிக்கைகளை பிறருக்குத் தொந்தரவின்றி மேற்கொள்ள முடியுமாம். 'ட்றைவ் இன் செக்ஸ'; பெட்டிகள் என இவை அழைக்கப்படுகின்றன.

சுவிஸின் சூரிச் நகரிலுள்ள சிவப்பு விளக்கு மாவட்டமொன்றில் அதிகமான விபாசாரிகள் நடமாடுவதாக பல்லாயிரம் குடும்பத்தவர்கள் முறைப்படுகளை தெரிவித்தத்தை தொடர்ந்தே மேற்படி பாலியல் தொகுதி பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

'அவர்கள் (விபசாரிகள்) பட்டப்பகலிலும் பரந்தளவில் காணப்படுகின்றார்கள். இதனை நாங்கள் பார்க்க சகிக்கவில்லை' என  ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் ரெடோ கசானோவா இது குறித்து தெரிவிக்கையில் 'எங்களால் விபசாரத்தை ஒழிக்க முடியாது. எனவே அதனை எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என கற்றுக்கொள்ள வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • naren Wednesday, 20 July 2011 03:34 AM

    அடடா இது அல்லவா போலீஸ்

    Reply : 0       0

    jam Wednesday, 20 July 2011 02:19 PM

    பட்ட காலே படும், கெட்ட இனமே கெடும் !

    Reply : 0       0

    asker Wednesday, 20 July 2011 04:21 PM

    உலகம் அழிப்யபோகிறது ( வீதியில் விபச்சாரம் செய்யாமல் கொஞ்சம் ஓரம்மாவி செய்யுங்கள் என்று கூறும் காலம் வந்துவிட்டது )

    Reply : 0       0

    xlntgson Wednesday, 20 July 2011 09:03 PM

    Solicited or unsolicited?

    Reply : 0       0

    ஜிப்றி Monday, 25 July 2011 01:48 PM

    ஆகா இது புதுமை! தெருவிற்கே கொண்டு வந்துவிட்டார்கள்.

    Reply : 0       0

    ris Monday, 25 July 2011 05:15 PM

    என்ன கொடும சேர் இது.......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .