Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 15 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவிலுள்ள வெதுப்பகமொன்று, பலவகை விநோத உருவங்களில் கேக் செய்து அதனை விற்பனை செய்து வருகின்றது. இவ் உருவங்களை பார்க்கும் வாடிக்கையாளர்கள் பெரும் வியப்படைகின்றனர்.
மனிதர்கள், விலங்குகள் மற்றும் கைப்பை போன்ற பல்வேறு உருவங்கள் வியக்கத்தக்க வகையில் இக்கேக்குகள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜோர்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் அமைந்துள்ள ஹைலன்ட் வெதுப்பகத்திலே இவ்வாறான கேக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கரென் போர்ட்டெலோ எனும் கேக் அலங்கரிப்பு நிபுணர் தலைமையிலான குழுவினரே இந்த கேக்குகளை தயாரித்துள்ளனர்.
இக் கேக்குகள் ஒவ்வொன்றும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனினும் பாடகர் சேர் எல்டன் ஜோன், நடிகை டெமி மூர், பாடகர் லில் வெய்ன் போன்றோரும் இந்த வெதுப்பகத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளதால் அவர்கள் விலையை பொருட்படுத்தாமல் அவற்றை வாங்குகின்றனராம்.
இது தொடர்பாக கரென் இணையத்தளமொன்றில் தெரிவிக்கையில், 'எனது நண்பரின் வெதுப்பகத்திற்கு நான் முதன் முதலில் செல்லும் போது உணவுப்பொருட்கள் அலங்கரிக்கப்படாமல் இருப்பதை அவதானித்தேன். அதனால் நான் சில அலங்கார கேக்குகளை தயாரித்து உதவ முடியும் எனத் தெரிவித்தேன். இப்படித்தான் இந்த அலங்கார கேக் தொழில் ஆரம்பமாகியது. நான் முறையான சமையில் கலை கற்கவில்லை. உணவு அலங்கரிப்புப் பயிற்சிகளையே பெற்றுள்ளேன்' என கூறியுள்ளார்.
எனினும் இந்த கேக்குகள் பார்வைக்கு அழகாக இருப்பது மாத்திரமல்லாமல் நாவுக்கும் சுவையாக இருப்பதை உறுதிப்படுத்துவதில் கரெனும் அவரின் குழுவினரும் அதிக அக்கறை கொண்டுள்ளனராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
1 hours ago