Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 08 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது உதடுகளால் அழகிய ஓவியங்களை வரையும் திறமையைக் கொண்டுள்ளார்.
நடேலி இறிஸ் எனும் இப் பெண், தனது இதழ்களால் கன்வாஸை முத்தமிட்டு ஓவியங்களை வரைந்து அதற்கு தனது இதழ்களாலேயே வர்ணங்களையும் பூசுகின்றார்.
அவர், மறைந்த பிரபல ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் ஓவியமொன்றை தான் உதடுகளால் வரையும் காட்சியை வீடியோவில் பதிவு செய்து யூ ரியூப் இணையத்தளத்தில் தரவேற்றம் செய்துள்ளார்.
தான் பாடசாலையில் கல்வி பயின்றபோது பெருவிரல் அடையாளங்கள் மூலம் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டதாக நடேலி இறிஸ் தெரிவித்துள்ளார்.
இதழ்களால் வரையும் முதல் ஓவியத்திற்கு மர்லின் மன்ரோவின் உருவப்படமே மிக பொருத்தமாக இருக்கும் என தான் கருதியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஓவியம் வரையும்போது உதடுகள் மிக களைத்துவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏராளமான லிப்ஸ்டிக்குகளை உதடுகளால் பூசியுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, 'எனது கண்களும் மிகவும் சோர்ந்துவிம். ஏனெனில் கன்வாஸுடன் நெருங்கி நின்றே இதழ்களால் ஓவியம் வரைய வேண்டும். பின்னர் சரியாக வரைகிறேனா என்று பார்ப்பதற்கு அடிக்கடி பின்னால் நகர்ந்து செல்ல வேண்டும்' எனவும் நடேலி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
54 minute ago
1 hours ago