2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வயோதிப தோற்றத்தை நாடிய இளம் காதல் ஜோடி

Kogilavani   / 2011 ஜூலை 08 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று தாம் முதுமை காலத்தில் எப்படியிருப்போம் என்பதை வெளிப்படுத்துவதற்காக சுமார் 3 லட்ச ரூபா  செலவில் ஒப்பனை செய்து புகைப்பட அல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளது.

சீனாவின் தென் பிராந்தியமான ஜயாங்ஸு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங்கை சேர்ந்த ஸாங் ஜின் (வயது 25) என்பவரும் அவரின் காதலியான யோ ஸென்னி (வயது 26) என்ற இருவருமே இவ்வாறு புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் வயோதிப தோற்றத்தில் வெளிப்படுவதற்கு ஏற்ற வகையில் ஒப்பனை செய்துள்ளனர். இவர்களுடைய தலை மயிர் பார்ப்பதற்கு வயோதிபர்களின் தலை மயிர்தோற்றத்தைப் போன்றே கலரிங் செய்யப்பட்டிருந்தது. ஆடைகளும் வயதானவர்கள் அணியும் விதத்தில் இருந்தன.

இவ்வாறு இணைந்து எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படம் சீனாவில் மிகவும் பிரசித்தி பெற்ற  காதல் பாடலொன்றின் 'நாம் இருவரும் சேர்ந்து வயோதிபராவோம்' என்ற வரிகளை சித்தரிக்கும் வகையில் இப்புகைப்படங்களில் தோன்றினர்.

இது குறித்து சாங் தெரிவிக்கையில், நாங்கள் இருவரும் இணைந்து முதுமைகால காதல் அனுபவத்தை பெற்றுக்கொள்ள விரும்பினோம் என்று தெரிவித்துள்ளார்.

புகைப்படங்களை எடுக்கும்வேளையில் 'நான் வயதாகி அவலட்சணமாகும்போது என்னை பார்த்து அலுத்துவிடுவாயா'? என ஸாங்க் தன் காதலரிடம் கேட்டார்.  

அதற்கு அவர் 'இல்லை என் பெண்ணே, நீ எப்போதும் எனது அழகான மனைவி, நான் எப்போதும் உன் அவலட்சனமான கணவன்' என அவர் பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .