2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆண்களிடமிருந்து தப்புவதற்காக மார்பங்களை சிறிதாக்கிய பெண்

Kogilavani   / 2011 ஜூலை 02 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீதியில் செல்லும்போது ஆண்கள் தனது பெரிய மார்பகங்களை உரசுகிறார்கள் என்று கூறி பெண்ணொருவர் தனது மார்பகங்களை சத்திரசிகிச்சை மூலம் சிறிதாக்கிக்கொண்ட சம்பவமொன்று  பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

பார்ன்ஸ்லே பிராந்தியத்திலுள்ள ரோய்ஸ்டன் நகரைச் சேர்ந்த ஜெம்மா வெஸ்ட்மோர்ல்ன்ட் எனும் 26 வயதான பெண்ணே இவ்வாறான சத்திரசிகிச்சையை செய்துகொண்டுள்ளார். அவர்  36  அளவுடைய தனது மார்பகங்களை 14 ஆக குறைத்துள்ளார். இதன்மூலம் தேவையற்ற கவன ஈர்ப்பை தடுக்கலாம் என அப்பெண் கூறியுள்ளார்.

அண்மையில் வீதியில் செல்லும்போது தனது  மார்பகங்களை ஆனொருவர் தொடுவதற்கு முயன்தறாக அவர் கண்ணீருடன் தெரிவிக்கின்றார்.

இதன் காரணமாக ஜெம்மா வெஸ்ட்மோர்லன்ட் வைத்தியசாலையொன்றில்  சத்திரசிகிச்சையை செய்து கொண்டார். 3 மணித்தியால இச்சிகிச்சையின் காரணமாக அவரது நெஞ்சுப்பகுதியில் சுமார் 9.5 கிலோ எடை குறைக்கப்பட்டது. இதனால் அவரது ஆடையின் அளவு பாதியாக குறைந்தது.

'உண்மையில் இந்த சத்திரசிகிச்சை நிபுணர் மிகத் திறமையானவர். இந்த சிகிச்சையை செய்துக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.  
இப்போது நான் வீதியில் செல்லும்போது யாரும் என்னை வெறித்துப் பார்ப்பதில்லை. என்னை தொடவும் முயற்சிப்பதில்லை. நான் எந்தளவு சிறப்பாக உணர்கிறேன் என்பதை விளக்க முடியாதுள்ளது' என அப்பெண் தெரிவித்துள்ளார்.

'இப்போது சில பெண்கள் பெருத்த மார்பகங்களையே விரும்புகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை பெரும்  அழுத்தமாகவே இருந்தது. நான் தேவையற்ற கவன ஈர்ப்பை எதிர்கொண்டேன். ஆண்களிடமிருந்து மாத்திரமல்ல பெண்களிடமிருந்தும்தான்.

நான் இரவில் வெளியில் செல்லும்போது பார்ன்ஸ்லே பகுதி மக்கள் எப்படியாவது என்னை கேலி செய்ய நினைப்பது போல் தென்பட்டனர். இதே நிலைதான் நான் வேறு நகரங்களுக்கு செல்லும்போதும் இருந்தது. சிலர் கேலிகளிலும் ஈடுபட்டனர்.  நான் வேடிக்கைப் பொருளாகியிருந்தேன்.

இப்போது அதிக எண்ணிக்கையான பெண்கள் சத்திரசிகிச்சை மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை  எனது நிலை அதற்கு எதிர்மாறானது. தேவையற்ற கவன ஈர்ப்பில்லாமல் நான் வெளியில் செல்ல விரும்பினேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • ruthra Saturday, 02 July 2011 03:46 PM

    மார்பகங்கள் சிறிதாக இருந்தால் மட்டும் இந்த கொச்சைப் பார்வைகளிலிருந்தும் தேவையைற்ற உரசல்களிலிருந்தும் தப்பிவிட முடியா என்பது கேள்விக்குறியானது.

    Reply : 0       0

    zih Saturday, 02 July 2011 05:42 PM

    ஆரோக்கியமான உடையை பேணுங்கள், அது உங்களை பாதுகாக்கும். ஏன் வீணான செலவுகள்? ஏன் வீணான கஷ்டங்கள்?!?!...

    Reply : 0       0

    noushams Wednesday, 06 July 2011 06:31 PM

    இதெல்லாம் உங்களைப் போன்றோருக்குத்தானே! வெளியில் காட்டி திரிவதற்கு. இது தேவைதான்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .