2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பட்டப்படிப்பு கண்காட்சிக்காக பிறரின் உள்ளாடைகளை சேகரிக்கும் மாணவி

Kogilavani   / 2011 ஜூன் 25 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவைச் சேர்ந்த மாணவியொருவர் தனது பட்டப்படிப்பு கண்காட்சிக்காக மற்றவர்களின் உள்ளாடைகளை சேரித்து வருகிறார்.
சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த யீ ஸீ என்ற மாணவியே இவ்வாறு உள்ளாடைகளை சேரிகத்து வருகிறார்.

ஹுபே நுண்கலை நிறுவகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இம்மாணவி, இரண்டு வாரங்களுக்கு முன்பாக குறித்த நிறுவகத்தின் அறிவித்தல் பலகையில், இதுகுறித்த அறிவித்தல் குறிப்பொன்றை ஒட்டியுள்ளார்.

'யீ ஸீ ஆகிய நான் புகைப்படம் குறித்த பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறேன். எனது பட்டப்படிப்பு செயற்திட்டத்திற்கான கண்காட்சிக்காக பழைய உள்ளாடைகளை சேகரித்து வருகின்றேன். நீங்கள் அனைவரும் உங்களிடம் இருக்கும் பழைய உள்ளாடைகளை பொது மலசலக்கூடத்தில் இருக்கும் பெட்டிக்குள் போடுவீர்கள் என்று நான் நம்புகின்றேன். உங்களது இந்த அன்பளிப்பு மூலம் சிறந்த  கலைப்பணி ஒன்றை மேற்கொள்ள முடியும். தயவு செய்து எனது செயற்திட்டத்தில் அனைவரும் இணைந்துக்கொள்ளுங்கள்' என்று அவ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செயற்திட்டத்திற்கு 'அந்தரங்கம்' என யீ ஸீ பெயரிட்டுள்ளார். இதுவரை நூற்றுக்கணக்கான உள்ளாடைகளை அவர் சேகரித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • riyas Sunday, 26 June 2011 11:57 AM

    சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா. இந்த சின்ன பொண்ணு யாரு சாத்தான் செட்டப்பா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .