2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கழிவறைத் தாங்கியில் ஒளிந்திருந்த இளைஞன்

Kogilavani   / 2011 ஜூன் 23 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இடத்திற்கிடம் கொண்டுசெல்லப்படக் கூடிய மலசலக் கூடத்தின் தாங்கியின் கீழ் அரை நிர்வாமாண தோற்றத்தில்  ஒளிந்திருந்த இளைஞன் ஒருவனைக் கண்டு பெண்ணொருவர் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

கொலோரிடா மாநிலத்தில் நடைபெற்ற யோகா விழாவொன்றிலேயே  மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கழிவறையின் தாங்கியில் ஏதோ ஒன்று அசைவதாக அப் பெண் புகாரிட்டார். அதையடுத்து காவலர் ஒருவர் விசாரிக்க அனுப்பப்பட்டபோது அங்கு ஒருவர் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபர் இடுப்புக்கு மேல் ஆடையோ  எதுவும் அணிந்திருக்கவில்லை. கழிவுகள் உடலில் அப்பியிருந்தது.

பாதுகாப்புப் படைவீரர்கள் அந்த இளைஞனை கைது செய்வதற்குள் அவர் தப்பிச் சென்றுள்ளார்.

மேற்படி நபர் 20 வயதுடையவராகவும் 6அடி 8அங்குலம் உயரத்தை உடையவராக இருக்கலாமென்று  தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத பாலியல் தொடர்பு குற்றத்திற்காக அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .