2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

லண்டனில் நிர்வாண சைக்கிளோட்டப் போராட்டம்

Kogilavani   / 2011 ஜூன் 14 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்வாண சைக்கிளோட்டிகளின் போராட்டமொன்று லண்டனில் இடம்பெற்றது. இதில் 1000 இற்கும் மேற்பட்ட நிர்வாண சைக்கிளோட்டிகள்  கலந்துக்கொண்டனர்.

'உலக நிர்வாண சைக்கிளோட்டப் பயணத்தின்' ஒரு பகுதியாக லண்டனிலும் இந்த சைக்கிள் பயணம் இடம்பெற்றது. 

லண்டனில் எட்டாவது தடவையாக நடைபெற்ற இந்த நிர்வாண சைக்கிளோட்டம் லண்டனின் ஹைட் பூங்காவிலிருந்து ஆரம்பமாகியது.  

போக்குவரத்து நெரிசல் மிக்க வீதியில் ஆடைகளை முற்றாக  களைந்துவிட்டு இவர்கள் சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது 9 மைல் தூரத்தை இதேகோலத்தில் இவர்கள் கடந்து சென்றனர்.

எண்ணெய் மற்றும் கார்களை சார்ந்திருக்கும்  கலாசாரத்திலிருந்து விடுப்பட்டு அதற்கு மாற்றாக சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்காக இப்போராட்டம்  நடத்தப்பட்டது. வீதிகளில் சைக்கிளோட்டிகள் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாக இருந்தது.

அதிஷ்டவசமாக வெயில் அடித்ததால் நிர்வாண சைக்கிளோட்டிகள் குளிர், மழையினால் பாதிக்கப்படவில்லை.  
'துணிந்த அளவுக்கு ஆடை களையுங்கள்' என இதில் பங்குபற்றுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவர்கள் முழுநிர்வாணமாக வரவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படவில்லை. சௌகரியமானவாறு சிறிய ஆடைகளை அணிந்துவாருங்கள் என  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

 
இந்த நிர்வாண சைக்கிளோட்ட ஆர்ப்பாட்டம் உலகில் 50 நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கனடாவின் ஒட்டோவா, டொரன்டோ, சிலி, கிறீஸ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள்  இடம்பெற்றது. இப்போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றியிருந்தனர்.


 


You May Also Like

  Comments - 0

  • Jeewan Wednesday, 15 June 2011 01:09 AM

    எங்க நாட்டுலையும் ரொம்ப வாகனம், பெற்றோல் பாவிக்குறாங்க, சைக்கிள்ல போகவே முடியல.

    Reply : 0       0

    hilmy Wednesday, 15 June 2011 05:32 AM

    தயவு செய்து நிர்வாண செய்திகளை podamalirinthaal மனித நலனிற்கு நன்மை பயக்கும் செய்திகளை மட்டும் பார்த்து இளைஞர் சமூகம் payanperum.

    Reply : 0       0

    mafas Wednesday, 15 June 2011 05:36 PM

    உலக அழிவின் அடையாளங்களில் இதுவும் ஒன்று...

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Wednesday, 15 June 2011 09:12 PM

    நிர்வாணமாகத் தெரியவில்லையே, அரை நிர்வாணமாகத் தானே தெரிகிறது, நல்ல தலைப்பைக் கொடுத்து ஏமாற்றிவிட்டீர்களே!

    Reply : 0       0

    IBNU ABOO Friday, 17 June 2011 01:50 AM

    இந்நாடுகளில் காலப்போக்கில் சாதாரணமான வாழ்க்கை ஆதிமனிதன் நிர்வாணமாக வாழ்ந்தது போலாகிவிடும் . naakareekam ,புதுமை ஆகியவற்றின் உச்சம் இப்போது மேல்நாடுகளில்தான். உடை , நான்கு சுவர்களுக்குள் நடைபெருவதேல்லாம் வீதிக்குவந்துவிட்டது .மிருகங்களே இவர்களைக்கண்டு வெட்கிக்கும் . மேல்நாட்டு நாகரிக மோகிகள் இவர்களை பின்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ,வாழ்க நிர்வாணம் , வளர்க அவமானம் .

    Reply : 0       0

    noushams Friday, 01 July 2011 08:23 PM

    இது தற்பொழுது தேவையான விசயமா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .