2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பெண்களின் மலசலக்கூடத்தில் பாலியல் பொம்மையை வைத்த மாணவன் நெருக்கடியில்

Kogilavani   / 2011 ஜூன் 10 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவிலுள்ள கல்லூரியொன்றில் காற்றடைக்கக்கூடிய பாலியல் பொம்மையொன்றை பெண்களின் மலசலக்கூடத்தில் வைத்துவிட்டுச் சென்ற மாணவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

இப்பாலியல் பொம்மையை வெடிகுண்டென எண்ணி நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

இன்டியானா மாநிலத்திலுள்ள இக்கல்லூரியின் மாணவனான டெல் மோர்டன், தற்போது 8 வருட சிறைதண்டனையை எதிர்நோக்கியுள்ளான்.

குறித்த மாணவன் பெண்களது மலசலக்கூடத்திற்கு பொதியொன்றுடன் செல்வதும் பின்னர் வெறுங்கையுடன் திரும்பிவருவதும் இரகசிய கண்காணிப்பு கமெராவில் பதிவாகியதனூடாக அவதானிக்கப்பட்டது.

அவன் தலையை மறைக்கும்விதமாக ஆடையணிந்து கொண்டு மேற்படி மலசலக்கூடத்திற்கு சென்றான். இதனால் யாரோ வெடிகுண்டு வைத்துவிட்டு வருகிறார்கள் என எண்ணிய கல்லூரி அதிகாரிகள் குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவித்தனர்.  அவர்கள் வந்துப் பார்த்தபோது குறித்த பாலியல் பொம்மை நிலத்தில் கிடந்துள்ளது.

விசாரணையையடுத்து டெல் மோர்டன் கைது செய்யப்பட்டான். நீதிமன்ற விசாரணையின்போது தான் வேடிக்கைக்காக இப்படி செய்ததாகவும் ஆனால் இவ்விவகாரம் வேறு வகையில் பூதாகரமாகிவிட்டதாகவும் தெரிவித்தான்.  அதிகாரிகள் இவ்விடயத்தை அநாவசியமாக 'ஊதி பெருப்பித்துவிட்டதாக' அவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளான்.

தற்போது மோர்டன் கல்லூரிக்கு வருவற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவன் கல்லூரியில் பட்டம் பெறும் வாய்ப்பை இழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவனுக்கான தண்டனை நீதிமன்றத்தால் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் 8 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .