Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 08 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய பெண்ணொருவர் தனது இறந்த மகனின் உயிரணுக்கள் மூலம் வளர்ப்புத் தாய்மார்களினூடாக குழந்தைகளைப் பெற்றுகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவில் வைத்தியராக தொழில்புரியும் லமாரா கெலேஸ்வா என்பவரே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
அவரின் 26 வயதுடைய மகனான மிக்கெய்லை புற்றுநோயின் காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு அவர் இழந்துவிட்டார். ஆனால் தனது மகனின் உயிரணுவினூடாக அவரின் சந்ததியை பெருக்கிகொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தனது மகன் இறப்பதற்கு முன்பே அவரின் உயிரணுக்களைபெற்று பாதுகாத்து வந்துள்ளார்.
அதன்பின் இரு வாடகைத் தாய்மார்களை மகனின் உயிரணுக்களைக் கொண்டு கர்ப்பம் தரிக்கச் செய்தார்.
அவரது முயற்சி வீண்போகவில்லை. இரண்டு பெண்களும் கர்ப்பம் தரித்தனர். அவர்கள் இருவருக்கும் இரட்டைக் குழந்தைகள் - 3 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் - கடந்த ஜனவரி மாதம் பிறந்தன.
'மிக்கெய்ல் அதிக இறை நம்பிக்கையுடையவர். மற்றும் அவர் குழந்தைகள், குடும்பம் பற்றி அதிகம் நினைத்துகொண்டிருப்பார். அதனால் குழந்தைகள் பெறும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை என எண்ணுகிறேன்' என அவரது தாய் கெலேஸ்வா தெரிவித்துள்ளார்.
ஆனால் தனது பேரக் குழந்தைகளை கெலேஸ்வா பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தந்தை அல்லது தாய்மார்களே குழந்தைகளை பதிவு செய்ய முடியும் எனவும் தாத்தா பாட்டிமார் பதிவு செய்ய முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
இறந்த ஆண்களின் மனைவிகள் தான் இப்படி குழந்தைகளை பெறவோ அல்லது வாடகைத் தாய்மார்கள் மூலம் குழந்தை பெறவோ முடியும். அவர்களின் தாய்மார்கள் இதற்கு ஏற்பாடு செய்ய முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால் மொஸ்கோ மாநகர நீதிமன்றத்திற்கு இதுகுறித்து மனுவொன்றை தாக்கல் செய்துள்ள கெலேஸ்வா, ஊடகங்களுக்கும் தனது கதையை தெரிவித்து ஆதரவு திரட்டிவருகிறார்.
xlntgson 0776994341;0716597735 sms only Thursday, 09 June 2011 09:22 PM
உறவின் முறை கேடு! உறவின்முறைக் கேடு!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
50 minute ago
1 hours ago