Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 06 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வோர்செஸ்டர் கல்லூரி நூலகத்தில், மாணவர்கள் குழுவொன்று வாராந்தம் அரை மணித்தியாலம் நிர்வாணமாக தோன்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படி பல்கலைக்கழக நூலக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நூலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 3 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் மாணவர்கள் குழுவொன்று அரை மணித்தியாலம் அரை நிர்வாணமாக கற்கைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தது.
2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு 'அரை நிர்வாணம் அரை மணித்தியாலம்' எனும் பெயரிடப்பட்டடிருந்தது.
காலை உணவுக் குழு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் இந்த மாணவர் குழுவில் சுமார் 40 மாணவர்களும் மாணவிகளும் இடம்பெற்றிருந்தனர்.
தற்போது இவர்கள், நிர்வாகத்தினால் ஒழுக்கவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஒக்ஸ்போட் பல்கலைக்கழக நூலக அதிகாரி, இந்த நிர்வாண நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், இச் செயற்பாடு ஏனைய வாசகர்களின் கவனத்தை திசைதிருப்புவதாக அமையும் எனவும் சாடியுள்ளனர்.
குறித்த மாணவர்களுக்கு மற்றும் நூலக நிர்வாகமானது மின்னஞ்சலினூடாக கண்டன கடிதமொன்றை அனுப்பியுள்ளது. 'அரை நிர்வாணம், அரை மணித்தியாலம் என்ற இச்செயற்பாடானது தீங்கற்ற வேடிக்கை போல் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் தயவு செய்து இந்த செயற்பாட்டை நூலகத்தில் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளும்படி வேண்டிகொள்கின்றோம்' என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாட்டை உடன் நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுத்தால் துறைத்தலைவரிடம் நூலக அதிகாரிகள் முறையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மேற்படி மாணவர் குழுவினர் இத்தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரை நிர்வாணம், அரை மணித்தியாலமென்ற இந்நிகழ்வானது வோர்செஸ்டர் கல்லூரியில் நீண்ட பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. வெப்பமான தருணங்களில் மாணவ மாணவிகள் தம்மை 'கூலாக்கி கொள்வதற்கு' இது உதவுகிறது என அம்மாணவர் குழுவின் அங்கத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
xlntgson 0776994341;0716597735 sms only Monday, 06 June 2011 08:55 PM
உஷ்ணம் என்றால் எந்த உஷ்ணம்? தலைக்கு ஏறி இருக்கிறதோ தெரியாது! தேசிக்காய்/எலுமிச்சம் பழம் தேயுங்கள் தலைக்கு அதுவும் நூலகத்தில் செய்யாதீர்கள், குளிக்கும் அறைக்கு போங்கள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
44 minute ago
1 hours ago