Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 மே 20 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியின் பிரபல காப்புறுதி நிறுவனமொன்று தனது சிறந்த விற்பனை பிரதிநிதிகளை பாராட்டும் முகமாக விபசாரிகளை வாடகைக்கு அமர்த்தி செக்ஸ் விருந்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்கோ எனும் நிறுவனமே இத்தகைய விருந்து நிகழ்ச்சியை 2007 ஆம் ஆண்டு நடத்தியமை இப்போது அம்பலமாகியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய மீள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந் நிறுவனமானது தமது நிறுவனத்தில் சிறந்த விற்பனையாளர்களாக விளங்குபவர்களை பாராட்டி ஊக்குவிப்பதற்காக விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் வரலாற்று பிரசித்தி பெற்ற புடாபெஸ்ட் கெல்லார்ட் பாத்ஹவுஸில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட 100 விற்பனை பிரதிநிதிகளை மகிழ்விப்பதற்காக 20 விபாசாரிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக ஜேர்மன் வணிகத்துறை பத்திரிகையான ஹான்டல்ஸ்பிளாட் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த அப்பெண்களை அழைத்துக்கொண்டு 'ஸ்பா' வொன்றுக்கு அழைத்துச் சென்று அவர்கள் எதை விரும்புகின்றார்களோ அதை செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தாக நிகழ்வில் பங்குபற்றிய பெயர் குறிப்பிட விரும்பாத சிலரை மேற்கோள்காட்டி அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட 20 விபசாரிகளும் அவர்களின் தரத்திற்கு ஏற்ப வெவ்வேறு நிறத்திலான கை வலயங்களை அணிந்திருந்து காத்திருந்தனராம்.
வெள்ளை நிற வலயம் அணிந்திருந்தவர்கள் நிறுவனத்தின் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தனர். சிவப்பு, மற்றும் மஞ்சள் நிறத்திலான வலயங்களை அணிந்திருந்தவர்களை ஏனைய ஊழியர்கள் நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டதாம்.
இச்சம்பவம் தொடர்பான செய்தி வெளியான பின் இது குறித்து ஏர்கோ நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
'இத்தகைய செக்ஸ் விருந்துகள் எமது நிறுவனத்தின் விதிகளுக்கு முரணானதாகும். இது தொடர்பாக நாம் விசாரனைகளை ஆரம்பித்துள்ளோம். இச்சம்பவத்திற்குப் பொறுப்பான முகாமையாளர்களும் ஏனைய சபை அங்கத்தவர்களும் இப்போது எமது நிறுவனத்தில் இல்லை' என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
xlntgson Saturday, 21 May 2011 09:41 PM
செக்ஸ் விருந்து சாத்தியம் என்றால் பிரேமானந்தாக்கள் நித்யானந்தாக்கள் தேவலை போலும்!
lolita complex என்னும் மனநோயைத்தான் சுகப் படுத்தினோம் என்று கூறுகின்றனர்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
51 minute ago
1 hours ago