Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 27 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியில் நள்ளிரவில் பாலியல் பொம்மை மூலம் பலரை சங்கடத்தில் தள்ளிய பெண்ணொருவர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேர்லின் நகரிலுள்ள தொடர்மாடி குடியிருப்பாளர் ஒருவர், நள்ளிரவில் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, தனது அயல் வீட்டில் இனந்தெரியாத யாரோ மின்சார துளையிடும் கருவியை பயன்படுத்துவதாக புகாரிட்டுள்ளார்.
பொலிஸார், தொலைபேசி அழைப்பு விடுத்த நபரின் அயல்வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய பெண்ணுடன் தொடர்புக் கொள்ள முயன்றனர். ஆனால், அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதனால் பொலிஸார் அந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு சென்று உள்ளே என்ன நடக்கிறது என அறிவதற்குத் தீர்மானித்தனர்.
ஆனால் அங்கு குற்றச்செயல்கள் எதுவும் நடக்கவில்லை. மின்சாரத்தினால் இயங்கும் பாலியல் சாதனமொன்றிலிருந்தே அந்த சத்தம் வந்தமை கண்டறியப்பட்டது. அப்பாலியல் பொம்மை தானாக இயங்கத் தொடங்கி நிலத்தில் விழுந்து பெரும் இரைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அந்ந சத்தத்தை தெருவிலிருந்தும் கேட்க முடிந்தது என அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் உரிமையாளரான பெண் அப்போது வெளியில் சென்றிருந்தார்.
தற்போது அந்த வீட்டுக் கதவு உடைக்கப்பட்டதற்கான செலவுத் தொகையை செலுத்த வேண்டிய நிலையில் அப்பெண் உள்ளார். அத்துடன் அவர் வீட்டிற்குத் திரும்பும்போது அயலவர்களின் 'ஒரு மாதிரியான' பார்வையையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
xlntgson Thursday, 28 April 2011 09:43 PM
என்ன பாலியல் சாதனமோ, கண்ணராவியோ இதெல்லாம் இங்கே வராமல் இருந்தால் நல்லது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago