Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 27 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெய்னிலுள்ள உடற்பயிற்சி நிலையமொன்றில் (ஜிம்) நிர்வாணமான நிலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பாஸ்க் பிராந்தியத்திலுள்ள இந்த உடற்பயிற்சி நிலையத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. இதற்குக் நாட்டின் பொருளாதார நிலைமையே காரணமென இதனது உரிமையாளர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில் இந்த உடற்பயிற்சி நிலையத்தில் அங்கத்தவர்களை அதிகரித்துக் கொள்ளும் நோக்குடன் மேற்படி நிர்வாண உடற்பயிற்சித் திட்டத்தை அந்நிலையத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
உடற்பயிற்சி ரீதியான காரணங்கள் அல்லாமல் பொருளாதார காரணங்களே இந்த வில்லங்கமான திட்டத்திற்கு காரணம் என அந்நிலையத்தின் உரிமையாளர் மேர்ச்சே லெசேகா கூறியுள்ளார்.
'என்னைப் பொறுத்தவரை நிர்வாணமாக தோன்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாத போதிலும் அப்படி தோன்றுவதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் இந்தப் புது முயற்சியானது பணத்தை வசூலிப்பதற்காக மட்டுமே' என மேர்ச்சே லெசேகா ஒப்புக் கொண்டுள்ளார்.
அப்பிராந்தியத்தில் நீச்சல் தடாகங்களை நடத்தும் இரு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய மாதம் ஒரு தடவை நிர்வாணக் குளியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பளிக்கும் திட்டம் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றதாம். அதையடுத்து இந்த உடற்பயிற்சி நிலையமும் இத்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
xlntgson Thursday, 28 April 2011 09:41 PM
எல்லாரும் பார்க்க சகிக்காது பொது இடங்களில் உடற்பயிற்சி இவ்வாறாக காட்டிக்கொண்டு செய்வதை விட தன் வீட்டில் தனி அறையில் செய்து கொண்டால் என்ன? ஓஹோ, வியாபார நோக்கம் என்று தான் அவர்களே கூறி விட்டார்களே பிறகு என்ன?
Reply : 0 0
imsa Friday, 29 April 2011 12:49 PM
உலகத்தின் அழிவுக்கு இந்த மாதிரியான விடயங்கள்தான் காரணம் , நிர்வாணத்திற்கும் உடற்பயிற்சிக்கும் என்னய்யா தொடர்பு?
Reply : 0 0
fahmy Sunday, 08 May 2011 06:00 AM
எதிர்கால சந்ததிகளின் நிலை அவர்களுக்கு இவ்வாறு முன்மாதிரிகள் இருந்தால் என்னவாகும்? அம்மக்களின் வாழ்க்கை இனிமேல் யாரும் நல்லவர்கள் இவ்வுலகத்தில் இருக்கக் கூடாதா? மிருகங்களை விடவும் மிக கேவலமாக மனிதன் மாறிவிட்டான் . இவர்கள் பின்பற்றும் மதம் இவ்வாறான ஒழுக்கம்கெட்ட வெட்கக் கேடான வாழ்க்கைக்கு
பொருத்தம் இல்லாத செயல்களை அங்கீகரிக்கின்றதா? மனிதன் இயற்றிய சட்டங்களில் ,இவ்வாறான செயல்களுக்கு நீதிமன்றத்திலும் அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.
இது பிழையான பாதை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago