2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆபாச படங்களில் தோன்றியதால் பாடசாலை வேலையிலிருந்து நீக்கப்பட்ட பெண்

Kogilavani   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கனேடிய பாடசாலையொன்றில் கடமையாற்றி வந்த பெண்ணொருவரின் ஆபாச  படங்களில் தோன்றிய காட்சிகள் இணையத்தளத்தில் வெளியானதால் அவர்  பாடசாலையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜுலி கக்னன் எனும் இப்பெண்,  கியூபெக் நகரின் அருகிலுள்ள உயர் பாடசாலையில் செயலாளராக கடமையாற்றி வந்தார். அதேவேளை சில பாலியல் படங்களிலும் சுமந்தா ஆர்டென்ட் எனும் பெயரில் நடித்துவந்தமை இரகசியமாக இருந்தது.  

ஆனால் அப்படங்களில் ஒன்றை பார்வையிட்ட பாடசாலை  மாணவன் ஒருவன் அப்பெண்ணிடம் 'நான் உங்களை பாலியல் படங்களில் பார்த்துள்ளேன். எனக்கொரு ஆட்டோகிராவ் தரமுடியுமா' எனக் கேட்டாராம்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த அப்பெண்  இவ்விடயத்தை இரசியமாக வைத்துக் கொள்ளுமாறு மாணவனிடம் கூறியுள்ளார். எனினும் அம்மாணவன் இதை தன் நண்பர்களிடம் கூற, அப்படியே கதை பரவி பாடசாலை நிர்வாகத்தினரின் காதுகளுக்குச் சென்றது.

அதையடுத்து அப்பெண் பாடசாலை வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார்.  

பாடசாலை நிர்வாகத்தின் பேச்சாளர் லூயிஸ் பொய்ஸ்வெர்ட்  இது தொடர்பாக கூறுகையில்,  இப்பாடசாலை வரலாற்றில் நிகழ்ந்த இவ்வாறான முதல் சம்பவம் இதுவென தெரிவித்துள்ளார்.

'அவர் பாடசாலை மாணவர்களுடன் நேரடியாக தொடர்புபடவில்லை.  ஆனால், பாடசாலை மாணவர்களையும், பாடசாலை அலுவலர்களையும் இந்த விடயம் பாதிக்கும் என்பதால் நாங்கள் அவளை நீக்கிவிட்டோம்' என்று தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணின் நடவடிக்கை பொருத்தமற்றது என ஆசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார்.

'ஆனால், இது சட்டவிரோதமானது அல்ல. எனினும் நாங்கள் இவ்வாறான விடயங்களுக்கு இங்கு இடமில்லை என்று மாணவர்களுக்கு தெரிவித்து விட்டோம்' என்று அந்த ஆசிரியை கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 27 April 2011 08:58 PM

    ஒரே மாதிரியான உருவத்தோற்றம் உடையவர்கள் ஏழுபேர் உலகில் இருப்பார்கள் என்கிறார்களே, இந்தப் பெண்ணுக்கு வேறு பெயரில் தோன்ற மதியில்லையா?

    Reply : 0       0

    kireethka Friday, 29 April 2011 12:14 AM

    டீச்சர் இப்படி எண்டால் மாணவர்கள் எப்படி இருப்பார்கள்?

    Reply : 0       0

    CIDDEEQUE Friday, 29 April 2011 04:19 PM

    இதுவும் கனடாவில் பிரச்சினையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .