2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

'அவதார்' சாதனையை முறியடித்த செக்ஸ் திரைப்படம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 21 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹொலிவூட் திரைப்படமான 'அவதார்' அதன் முதல் நாள் வெளியீட்டின்போது நிலைநாட்டியிருந்த சாதனை முப்பரிமாண (3டி) செக்ஸ் திரைப்படமொன்றினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

'3டி செக்ஸ் அன்ட் ஸென்' என்ற பெயரில் உலகின் முதலாவது முப்பரிமாண நீலத் திரைப்படம் ஹொங்கொங்கில்  சில தினங்களுக்குமுன் திரையிடப்பட்டது.  

இத்திரைப்படம்  ஹொங்கொங் திரையரங்குகளில் முதல் நாள்  திரையிடப்பட்டபோது 360,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 4 கோடி இலங்கை ரூபா) வசூலாகியுள்ளது.

இதற்கு முன் ஹொங்கொங்கில் முதல்நாள் காட்சிகளின்போது அதிக வசூலை குவித்த திரைப்படம் ஜேம்ஸ் கெமரோன் இயக்கிய அவதார் எனும் ஹொலிவூட் திரைப்படமாகும். 

அத்திரைப்படம் 2009 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் திரையிடப்பட்டபோது 339,754 அமெரிக்க டொலர்களை வசூலித்திருந்தது. அவதாரும் ஒரு முப்பரிமாண திரைப்படம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அதை தற்போது உலகின் முதலாவது முப்பரிமாண நீலத் திரைப்படம் முறியடித்துள்ளது.

கன்டோனிஷ் எனும் சீன மொழியில் வெளியான இத்திரைப்படம் நிர்வாணக் காட்சிகள் மற்றும் பாலியல் காட்சிகளையும்  கொண்டதாகும்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 22 April 2011 07:50 PM

    முழு நீலப் படம்! நீளம் அகலம் ஆழம்! நல்லாத் தான் இருக்கும், நவ நாகரிகம், இலங்கைக்கு வருமோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .