2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நிர்வாண மொடல்களின் உடலில் புலி விழிப்புணர்வு ஓவியம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 20 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அழிவடைந்துவரும்  தென் சீனப் புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிர்வாண மொடல் அழகிகள் மூவரை ஒன்றிணைத்து புலியின் உருவத்தை வரைந்துள்ளார் அமெரிக்க ஓவியரான ஓவியர் கிறேக் டிரேசி.

நியூ ஓர்லியன்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த ட்ரேசிக்கு இந்த ஓவியத்தை வரைவதற்கு 24 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாம்.

இதற்கான வார்ப்புருவை அவர் முதலில் தனது ஸ்டூடியோவில் வைத்து வரைந்துள்ளார். அதன் பின் மேற்படி 3 பெண்களின் நிர்வாண உடலில் மிகக் கவனமாக புலி ஓவியத்தை  வரைந்து வர்ணங்களை பூசியுள்ளார்.

43 வயதான ஓவியர் ட்ரேசி,  இதுவரை 400 மனித உடல்களில் ஓவியங்களை வரைந்துள்ளாராம்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

' இம்மொடல்கள்  அனைவரும் என்னிடம் தொண்டர்களாக பணியாற்றியவர்கள். நான் ஒருபோதும் அவர்களை கண்டறிவதற்கு முகவர் நிலையங்களையோ இணையத்தளங்களையோ பயன்படுத்தவில்லை. அவர்களே என்னை கண்டறிந்தனர்.

எனது முன்னாள் காதலிகள், நான் ஓவியங்களை வரைவதில் எவ்வாறு தொழில்சார் ரீதியில் செயற்படுகிறேன் என்பதை நன்கு புரிந்துகொண்டிருந்தனர். அதனால் எனக்கு பொறாமை தொடர்பான எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.  அவர்கள் அப்படி பொறாமை கொண்டிருந்தால் நான் சகித்துக் கொண்டிருக்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

16 வயதிருக்கும் போது உள்ளூர் கடைத் தொகுதியொன்றில் ஓவியம் வரைய ஆரம்பித்த கிறேக் பின்னர் உடல் ஓவியங்களுக்கான உலகின் முதலாவது கலைக் கூடத்தை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.

பணக்காரர்களும், புகழ்பெற்றவர்களும் எனது ஓவியத்தை உரிய மதிப்பளித்து பார்த்து மகிழ்ந்துள்ளனர். நான் எனது சில ஓவியங்களை அவர்களுக்கு 1,200 அமெரிக்க டொலர்களுக்கு விற்றுள்ளேன். ஆனால் அவர்கள் யார் என்று என்னால் கூற முடியாது. அனைத்து வகையானோரும் அவர்களில் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

' நான் ஒருபோதும் எதை வரைகிறேன், எப்படி வரைகிறேன் என்பது குறித்து எதிர்மறையான சர்ச்சைகளை எதிர்நோக்கியதில்லை' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 21 April 2011 09:57 PM

    விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது, மணப்பெண்ணுக்கு மச்சம் எங்கே எங்கே (மறைவான இடங்களில்) இருக்கிறது என்று கேட்பது மாதிரியான அபத்தமான கலைகள் ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .