Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 16 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மூத்த சகோதரி தொடர்பாக ஆபாச விபரக்கோவையொன்றைத் தயாரித்து சமூக வலைத்தளமொன்றில் தரவேற்றிய குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணி எனும் மேற்படி பெண் கன்னியாகுமரியில் வசிக்கும் தனது 39 வயதான சகோரியின் பெயரில் மேற்படி ஆபாச சுய விபரக்கோவை தயாரித்து இணைத்தளத்தில் பதிவேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்விருவருக்கும் இடையில் காணிப்பிரச்சினையொன்று இருந்ததாகவும் அதில் ஏற்பட்ட சர்ச்சையினால் தனது சகோதரியை பழிவாங்குவதற்காக ராணி மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனது சகோதரியின் கணவர் நடத்திவரும் கடை விபரங்களையும் சகோதரியின் விபரங்களையும் குறிப்பிட்டு இந்த விபரக் கோவையை ராணி தயாரித்துள்ளார்.
அதன்பின் பலர் கடைக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டபோதுதான் இணையத்தில் தனது ஆபாச விபரக்கோவை இருப்பது ராணியின் சகோதரிக்கு தெரியவந்ததாம்.
2009 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக கடந்த வருடம் ராணியின் சகோதரி சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து இது தொடர்பான புலன் விசாரணையில் பொலிஸ் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் தலையிட்டார். அதன்பின் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
'மேற்படி ஆபாச விபரக்கோவை தரவேற்றப்பட்ட ஐ.பி. முகவரியை ஆராய்ந்தபோது அது மைலாப்பூரிலுள்ள ராணியின் கணவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. விசேட பொலிஸ் குழுவொன்று வெள்ளிக்கிழமை காலை மைலாப்பூரில் கைது செய்தது' என கணினிக் குற்ற விசாரணைப் பிரிவை சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் எஸ். மாணிக்கவேல் கூறியுள்ளார்.
xlntgson Monday, 18 April 2011 10:27 PM
நாங்களும் மேற்குலகத்தவர் போல் ஆக வேண்டாமா என்று நினைத்தாரோ தெரியாது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago