Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியமின் மனைவியாகப் போகும் கேடி மிடில்டனின் உருவத்தில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் பிரிட்டனில் பரப்பரப்பாக விற்பனை செய்யப்படுகின்றன.
லண்டனில் உள்ள விளையாட்டு பொருள் கடையொன்றில் 35 ஸ்ரேலிங் பவுண்களுக்கு இந்த பொம்மை விற்பனை செய்யப்படுகிறது.
இத்தகையை 10,000 பொம்மைகளே தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்குரிய ஆடையமைப்பையும் அலங்காரங்களையும் பிரிட்டனைச் சேர்ந்த 7 ஆடை வடிவமைப்பாளர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
'ஆர்ட்குலு' எனும் நிறுவனம் தயாரித்த இந்த பொம்மைகளுக்கு 'இளவரசி கத்தரினின் திருமண நிச்சயதார்த்த பொம்மை' என பெயரிடப்பட்டுள்ளது. கேட் மிடில்டனின் பிரலமான நீல நிற ஆடையுடன் இந்த பொம்மை காணப்படுகிறது.
இந்த பொம்மையானது உயர் குதி கால் பாதணியை அணிந்துள்ளது. இந்த பொம்மையின் விவாக மோதிரமானது உண்மையான ஊதா நிறக் கல்லை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.
'ஆர்ட்குலு' இயக்குநர் லூசி போலெர்ட் கருத்துத் தெரிவிக்கையில் 'பிரித்தானிய பெஷன் தொழிற்துறையானது பிரித்தானிய பொருளாதாரத்திற்கு 22 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பங்களிப்பைச் செய்கிறது. அது உண்மையில் மிகப் பெரிய தொகை. அதனால் நாங்கள் பிரித்தானிய ஆடை வடிவமைப்பாளர்களை ஊக்குவிப்பதற்கும் தீர்மானித்தோம்' எனக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
42 minute ago
52 minute ago
1 hours ago