Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருமேனியாவில் இராணுவ முகாமென்று உல்லாச ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
விடுமுறைகளை செலவிடுவதற்காக வருபவர்கள் இராணுவ முகாமில் திகிலான அனுபவத்தை பெற்றுக்கொள்ளவும், ஓய்வெடுக்கும் வகையில் படை வீரர்களின் இந்த முன்னாள் இராணுவ தளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் இராணுவ கவச வாகனங்கள் படுக்கையறைகளாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உல்லாசப் பயணிகள் இராணுவத்தின் கவச வாகனத்தில் அமைக்கபட்ட படுக்கையறையை மட்டும் தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை. வெற்று பீரங்கி குண்டுகளால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையறைகளும் அங்கு உள்ளன.
ஒராஸ்டி நகரிலுள்ள இந்த இராணுவ முகாமை 35 லட்சம் டொலர்களை செலவழித்து உல்லாச ஹோட்டலாக மாற்றியுள்ளனர். இதனூடாக ஓரளவு இராணுவ முகாம் வாழ்க்கை அனுபவத்தை விருந்தினர்களுக்கு வழங்க முடியும் என ஹோட்டல் இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில அறைகள், இரகசியமான பாதள தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 80 ஹெக்டெயர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் விருந்தினர்கள் படையணிவகுப்பு, இராணுத் தாங்கி ஓட்டுதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுப்பயிற்சி அனுபவங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் ஒரு இரவு தங்குவதற்கு 80 டொலர்கள் கட்டணமாக அறவிடப்படுகிறது. 6 நாட்கள் தங்குவதற்கான கட்டணம் 240 டொலர்களாகும். காலை மற்றும் இரவு உணவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025