Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயர் அழுத்த மின்சார வயர்கள் பொருத்தப்பட்ட கம்பத்திற்கு மேல் நிர்வாணமாக ஏறியிருந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளார்.
தென் சீனாவின் ஹெச்சி நகரைச் சேர்ந்த மீர் வெய் எனும் இந்நபர் பிச்சைக்காரர்களை பொலிஸார் வெளியேற்றுவதற்கு எதிராக இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாராம்.
43 வயதான மீர் வெய், திடீரென தனது ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு உயர் அழுத்த மின்சார வயரில் ஏறிச்சென்றுள்ளார். அவரை கண்ட அருகிலுள்ள கடை உரிமையாளர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
சில மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டக்காரருடன் பேச்சுவார்த்தை நடத்தி சோர்வுற்ற பொலிஸார், பின்னர் காட்டு விலங்குகளை பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டு அவரை தரைக்கு கொண்டு வந்தனர்.
'நடக்கும் சம்பவங்கள் குறித்து அவர் மிக குழப்பமடைந்திருந்தார். அத்துடன் அவர் மது அருந்தியுமிருந்தார். இதுவும் அவரின் நடத்தைக்கு காரணமாக இருந்திருக்கும்' என பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
raasim Wednesday, 23 March 2011 02:55 AM
இவனுக்கு பைத்தியம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025