Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 நவம்பர் 14 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை போல் சீனாவின் தென் பகுதியிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள பொலிஸார் ரோந்து செல்வதற்கு சிரமப்பட்டனர்.
இந்நிலையில் ஹய்க்கு நகரிலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரான லீ கேயிங், வெள்ளநீரைக் கடந்து செல்வதற்கு ஒரு திட்டம் ஒன்றை வகுத்தார். அதாவது கம்பிகளாலான பொய்க்கால்களைப் பயன்படுத்தி வெள்ளநீரைக் கடந்து சென்றார்.
இது தொடர்பாக லீ கேயிங் விளக்குகையில் 'நாங்கள் நாட்டுப் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மட்டும்தான். எமக்கு வெள்ளத்தின்போது பயன்படுத்துவதற்கான பாதணிகள் முதலானவை இல்லை. அதனால் நான் பொய்க்கால்களை பயன்படுத்த ஆரம்பித்தேன். இப்போது அவை மிகவும் பிரபலமாகிவிட்டன' எனத் தெரிவித்துள்ளார்.
' இதனால் உங்களது பாதங்களை ஈரமாகாமல் வைத்துக்கொள்ள முடிவதுடன் உங்கள் பார்வைக்குத் தென்படாத பெரிய சுவர்கள் வேலிகளுக்கு அப்பாலுள்ள இடங்களையும் கண்காணிக்க முடியும்' என லீ கேயிங் கூறுகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago