Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன் நிர்வாணமாக தோன்றிய ஒரு நபரை பொலிஸார் நேற்று முன்தினம் கைதுசெய்துள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் விடுத்த பரிசுத் திட்டமொன்றுக்கமைய, அப்பரிசுப் பணத்தை வெல்வதற்காக அந்நபர் இச்சவாலில் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அல்கி டேவிட் என்ற பிரித்தானிய கோடீஸ்வரர், அமெரிக்காவின் ஜனாதிபதி பாராக் ஒபாமா முன்னால் யார் நிர்வாணமாக தோன்றுகின்றார்களோ அவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தனது இணையத்தளமான Battlecam.com என்ற பெயர் நிர்வாணமாகத் தோன்றும் நபரின் மார்பில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அத்துடன், இந்த இணையத்தளத்தின் பெயரை 6 தடவை உரத்துக் கூற வேண்டும் என்பனவே இப்பரிசை வெல்வதற்கான நிபந்தனைகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தனது இணையத்தளத்தைப் பகிரங்கப்படுத்துவதற்காக அல்கி டேவிட் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.
இதற்கிணங்க, பிலடெல்பியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் பராக் ஒபாமா உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஜோன் ரொட்ரிக்ஸ் நிர்வாணமாக ஓடினார்.
அதையடுத்து, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ரொட்ரிக்ஸ் மீது, அநாகரிகமான முறையில் பொது இடத்தில் நடந்துக்கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் தனக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசுப் பணம் கிடைக்கும் என ரொட்ரிக்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த ஜுவான் ரொட்ரிக்ஸ் இது தொடர்பாக தெரிவிக்கையில், தான் போட்டிக்கான எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் அல்கி டேவிட் இது தொடர்பாக கூறுகையில் 'நாங்கள் வீடியோ ஒளிப்பதிவுகளை ஆராய்ந்துகொண்டு இருக்கிறோம். இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்'.
xlntgson Wednesday, 13 October 2010 09:57 PM
நிர்வாண ஓட்டம் ஓடிவிட்டாரா? அட அடே! பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் இருக்கும் போது இது ஆச்சரியமில்லை. ஆனால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா, ஒத்துக்கொள்வார்களா? வலையிட நிறுவத்தினர், பலரை இம்மாதிரியாக தூண்டி, அதிலே தகுதி தராதரம், நல்லது கெட்டது விசேடம் என்றெல்லாம் பார்க்க வேண்டாமா என்பார்கள், என்ன? battlecam.com நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க இயலாதா, இங்கு போல்? சேவகர் தவறுக்கு முதலாளி கம்பி எண்ணுவது போல். அமெ. ஜனநாயகம் சற்றே வித்தியாசமானதுதான். ஒபாமாவின் கண்களில் படவில்லை என்று கூறினால்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago