2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஆபூர்வ புகைப்படம்: சந்திரனுக்கு குறுக்காக பயணிகள் விமானம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

பயணிகள் விமானமொன்று சந்திரனுக்கு  குறுக்காகச் செல்லும் காட்சியை, அவுஸ்திரேலிய புகைப்படக்கலைஞர் தோமஸ் படம் பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்படத்தை அவர் பிடித்துள்ளார்.

ஒரு மாதகாலமாக இவ்விமானம் தனது தலைக்கு மேலாக பறப்பதை அவதானித்து வந்த தோமஸ்,  கடந்த செட்டெம்பர் 16ஆம் திகதி இப்படத்தை பிடித்துள்ளார்.

"ஒவ்வொரு நாளும் இவ்விமானம்  மாலை 5.30 மணிக்கு தவறாமல் பயணிக்கும். சில நேரங்களில் அந்த விமானம் சந்திரனுக்கு குறுக்காக  செல்வதை நான் அவதானித்துள்ளேன்.

அன்றைய தினம் சந்திரன் இருந்த திசையை நோக்கி விமானம் வந்துகொண்டிருப்பதை கண்டேன். எனவே நான் அவசரமாக கமெராவை  சரி செய்துக்கொண்டு காத்திருந்தேன். சந்திரனும் விமானமும் நேராக வந்தபோது கமெராவை இயக்கினேன்" என தோமஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .