Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் சக்ஸன் தேவாலயத்தில் வேலைசெய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 1066இற்கு முந்திய காலத்தினுடைய மிகவும் பழைய, திறந்து- மூடக்கூடிய நுட்பமான வேலைப்பாடு கொண்ட மரத்தாலான ஜன்னல் ஒன்றிறை கண்டுபிடித்துள்ளனர்.
1000 ஆண்டுகள் பழைமையான இந்த ஜன்னல் 150 வருடங்களுக்கு மேலாக புனித அன்ட்ரூ தேவாலய சுவருக்குள் புதைந்திருந்துள்ளது. ஜன்னலின் வேலைப்பாடுகளை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் இந்த ஜன்னல் நோர்மன் படையெடுப்புக்கு முந்தியது எனக் கூறியுள்ளனர்.
தேவாலய புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஒரு சுவரின் சீமெந்து பூச்சினை அகற்றியபோது 2 அடிக்கு ஓர் அடி விஸ்தீரணமுள்ள வெளிச்சட்டத்தினை அவதானித்தனர். பழைய கட்டடங்களை பாதுகாப்பதற்கான சங்கத்தின் நிபுணர்கள் இது 1066ஆம் ஆண்டுக்கு முன்னையது என்பதை உறுதி செய்துள்ளனர்.
இவ்வாறு 1066இற்கு முந்தைய ஜன்னல்கள் பிரித்தானியாவில் ஒருசிலதான் உள்ளன. ஆனாலும் இந்த புதிய ஜன்னல் மட்டும்தான் திறந்து மூடக்கூடிய நிலையிலுள்ளதாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago