Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பொது மக்களுக்கு முன்பாக நிஜமான கிக்பொக்ஸிங் போட்டியில் ஈடுபட்டனர். இவர்கள் பாங்கொக்கிலுள்ள தாய்லாந்தின் நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட குத்துச்சண்டைக் களத்தில் இப்போட்டி நடைபெற்றது.
செனட் சபை உறுப்பினர்களான பயப் டங்சுவன் (59) மற்றும் டிரெக் டங்பங் (64) ஆகிய இரு செனட்டர்களுமே இவ்வாறு குத்துச் சண்டையில் ஈடுப்பட்டனர். கிக்பொக்ஸிங் போட்டிக்குரிய ஆடை, கையுறை என்பனவற்றை அணிந்து இரு சுற்றுக்கள் கொண்ட போட்டியில் இவர்கள் பங்குபற்றினர். தாய்லாந்தின் தேசிய விளையாட்டான கிக்பொக்ஸிங்கை ஊக்குவிப்பதே இம்மோதலின் நோக்கமாகும்.
அவர்கள் இருவரிலும் மூத்தவரான டிரெக்தான் இப்போட்டியில் சிறப்பாக பங்குபற்றியதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டங்சுவான் இது தொடர்பாக குறிப்பிடுகையில் 'அது மிகவும் நல்லது. என்னால் இப்போதும் எழுந்து நிற்க முடிகிறது' என்றார்.
எந்த வாக்குவாதங்களும் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்வதற்காக இருவரையுமே இணை வெற்றியாளர்களாக நடுவர் தெரிவு செய்தார். இவ்விரு அரசியல்வாதிகளும் முன்னாள் தொழிற்சார் குத்துச்சண்டை வீரர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெக் மேலும் கூறுகையில் 'இப்போட்டியின் நோக்கம் தாய்லாந்தின் கிக் பொக்ஸிங் விளையாட்டை சர்வதேச ரீதியில் கொண்டு செல்ல வேண்டும். இவையனைத்தும் இளம் சந்ததியினருக்காக மேற்கொள்ளப்படுகிறது. இப்பாரம்பரிய விளையாட்டை அவர்கள் தொடர்ந்து பேண வேண்டும்' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago