Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தப் படத்தை பார்க்கும் எந்தப் பெற்றோரும் பதற்றத்திற்குள்ளாவர். ஆனால், 6 மாத வயதை மட்டுமே கொண்ட இந்தக் குழந்தை, பாம்புகளுடன் விளையாடுவதை தனது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளது. இந்தக் குழந்தைக்கு விளையாட்டுப்பொருட்களே அந்தப் பாம்புகள்தான்.
சித்தி சித்தார்த் எனும் இச்சிறுமிக்கு செல்லப்பிராணிகளாக இந்த மலைப்பாம்புகள் காணப்படுகின்றன. அவளுடைய பெற்றோர் வேலை செய்துகொண்டிருக்க, இந்தக் குழந்தை அந்த பாம்பினது வாலைக் கடித்தவாறு அந்தப் பாம்புகளுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறது.
இந்தியாவின் மஹராஷ்டிராவில் வசிக்கும் பாம்புப் பிடிப்பவரும் விவசாயியுமான சித்தியின் தந்தை சித்தார்த் விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக் கொடுப்பதற்கு வசதி இல்லாததால் அந்தப் பாம்புகளை விளையாடுவதற்கு மகளுக்குக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
இந்த பாம்பு நஞ்சற்றது. ஆனாலும் அது இக்குழந்தையை தனது உடலால் சுற்றிவளைத்து முறுக்கிக்கொள்ள முடியும். அல்லது அவளை முழுமையாக விழுங்கிக் கொள்ளமுடியும்.
இது குறித்து சித்தார்த் மேலும் கூறுகையில், 'சித்தி வழமைக்கு மாறான நெருக்கத்தை பாம்புகளுடன் கொண்டுள்ளாள். அவள் பாம்புகளுடன் அதிக விருப்பத்துடன் விளையாடுவாள்' என்று கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago