Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏலத்திலிருந்த தனது தாயின் வீட்டை மீட்பதற்காக, தனது கன்னித்தன்மையை விற்பதாக அறிவித்திருந்த ஹங்கேரிய யுவதி, இனந்தெரியாத நான்கு மனிதர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளாள்.
தாக்குதல் நடத்தியவர்கள் அந்த யுவதியின் தலைமயிரையும் கத்தரித்து அலங்கோலமாக்கியுள்ளனர். ஆனால், அவளின் கன்னித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது.
18 வயதான இந்த யுவதி, தன்னை 'மிஸ் ஸ்பிரிங்' என மாத்திரம் அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளாள். ஹங்கேரிய 'தபு' தொலைக்காட்சி மூலம், தனது கன்னித்தன்மையை ஏலவிற்பனை செய்யப்போவதாக அறிவித்திருந்தாள்.
இந்த ஏலத் தொகை சிலதினங்களுக்குமுன் சுமார் 45 இலட்சம் ரூபாவை அண்மித்தது. ஆனால் ஏலவிற்பனை முடிவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன், ஹங்கேரியின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நான்கு ஆண்களால் அந்த யுவதி தாக்கப்பட்டுள்ளாள்.
இது தொடர்பாக அவள் கூறுகையில், 'அவர்கள் என்னை திறந்த வெளிக்கு இழுத்துச் சென்றனர். என்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப் போவதாக அச்சுறுத்தினர். எனது தலை மயிரை கத்தரித்தனர். தமக்குத் தேவையானதை இலவசமாகவே எடுத்தக்கொள்வோம் என மிரட்டினர். பின், என்னை நோக்கி சிலர் வர, அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். நான் பயந்துவிட்டேன். அதனால் எனது திட்டத்தை கைவிட்டேன். இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அவள் தெரித்துள்ளாள்.
அவளுக்கு தற்போதுதான் வயது 18. அவள் தன்னுடைய உண்மையான பெயரைக் குறிப்பிட மறுத்துள்ளாள். மேற்படி ஏலவிற்பனை கையாளப்பட்ட முறை குறித்து அவள் அதிருப்தி தெரிவித்துள்ளாள்.
'எனது குடும்பத்தை பாதுகாக்கலாம் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அந்தப் பணத்தால் எனது தாயின் வீட்டை மீட்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது நான் அனுபவிக்கும் உணர்வுகளை விலையாகக் கொடுத்து அதை செய்ய நினைக்கவில்லை. ஊடக உலகம், இந்த விடயத்தை பகிரங்கமாக்கிய விதம் நான் நினைத்ததைப்போல் இலகுவாக இருக்கவில்லை' என மிஸ் ஸ்பிரிங் கூறியுள்ளாள்.
xlntgson Tuesday, 07 September 2010 09:55 PM
பாவம் இவருக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலை வேறு ஒரு கன்னி பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது, ஹங்கேரியில் கூட நம் நாட்டில் மாதிரி வேலை இல்லாத ஆட்கள் இருக்கின்றனர் போலும். ஊடகங்கள் பரபரப்புக்காக தனி மனித விவகாரங்களை கொச்சை பண்ணுகின்றன என்பது அவர்கள் எதை செய்தாலும் தெரிகிறது. டயானா கொலை, மைகேல் ஜாக்சன் மரணம், புருனி விவகாரம், ரியாலிடி ஷோ என்று தொடருகிறது. செய்தி சொல்வதில் தொடங்கி கோள் சொல்வதும் தூண்டிவிடுவதும் இது மேற்குலக ஊடகங்களுக்கு மட்டுமல்ல, நமது ஊடகங்களுக்கும் பொருந்தும்!
Reply : 0 0
nnassm Wednesday, 08 September 2010 04:58 AM
தனது மானத்தை விற்று பணம் தேடுவதை விட மரணித்து போவது நல்லது ,நமது நாட்டில் என்றால் அவளை கொலை செய்து இருப்பார்கள்.
Reply : 0 0
xlntgson Wednesday, 08 September 2010 09:00 PM
மானத்தை விற்று பிழைக்கும் ஒவ்வொருவருக்கும் தண்டனை என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதே தண்டனை வேண்டும். விபசாரிகளை மட்டும் ஏன் தனித்து கூறவேண்டும்? இப்போது விபசாரத்துக்கு 'சமூக சேவை' பட்டமும் கிடைத்து இருக்கிறது. இவர்களை விட எந்த விதத்திலும் குறைவானவர்கள் அல்லர்கள் கர்ப்பத்தை கலைக்க பெண்கருக்களை கலைக்க ஸ்கேனிங், விந்து வங்கி, கருப்பை வாடகை ஏற்பாடு செய்யும் மருத்துவர்களும் மருத்துவ நிலையங்களும். மானத்தை விற்று பிழைப்பவர்களில் பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களும் அதிகமாக இருக்கின்றனர், திருமண மோசடிகளில்!
Reply : 0 0
fanaa Wednesday, 22 September 2010 06:26 AM
நிச்சயமாக ஆண்களும் உங்களது கருத்தை மறுக்க முடியாது ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
51 minute ago
58 minute ago
2 hours ago