Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
18 வயதான யுவதியொருவரின் கன்னித் தன்மையை ஏல விற்பனை செய்வதற்கு அனுமதியளித்த தொலைக்காட்சி அலைவரிசை நிர்வாகிகள், விபசாரம் செய்வதற்கு உதவினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர்.
'மிஸ் ஸ்பிரிங்' என மாத்திரம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள 18 வயதான யுவதியொருவர், தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விற்பதாக ஹங்கேரியின் 'டெலி தபு' தொலைக்காட்சியினூடாக அறிவித்தல் விடுத்திருந்தார்.
இந்த அறிவித்தலின் பின்னர் மூன்று செல்வந்தர்கள் ஏலத்தில் பங்குபற்றியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமைவரை ஆகக்கூடுதலாக சுமார், ஒரு கோடி ரூபா செலுத்த ஒருவர் முன்வந்துள்ளார். நாளை இந்த ஏல விற்பனை முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி ஏலத்தை நடத்தும் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு எதிராக ஹங்கேரிய அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொலைக்காட்சி நிர்வாகிகள் விபசாரத்திற்கு உடந்தையாக இருந்தனர் என குற்றம் சுமத்துவதற்கு இந்த ஏல விற்பனையை அரசாங்க வழக்குத் தொடுநர்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், தொலைக்காட்சி நிலைய நிர்வாகிகள் இக்குற்றச்சாட்டை புறக்கணித்துள்ளனர்.
'அவள் ஒரு விபசாரியாக நான் கருதவில்லை' என இந்த ஏலவிற்பனையை ஒழுங்கு செய்தவரான வழக்கறிஞர் மேட் கோக்கா தெரிவித்துள்ளார்.
'ஆம். ஹங்கேரியில் விபசாரம் குற்றமாகும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த விளம்பரமானது ஒரு பகுதியளவான மீறல்தான். அதற்கான தண்டனை ஒரு லட்சம் ஹங்கேரிய பொரின்ட் (சுமார் 50 ஆயிரம் இலங்கை ரூபா) மட்டும்தான். அது மிஸ் ஸ்பிரிங்கிற்கும் தெரியும். அத்தொகையை அவர் ஏல விற்பனை மூலம் பெறும் பணத்திலிருந்து செலுத்துவார் எனக் கருதுகிறேன்'' என மேட் கோக்கா கூறியுள்ளார்.
இந்த ஏல விற்பனை முதலில் ஈபே என்ற இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண் கொடுத்து அந்த யுவதியின் கன்னித்தன்மையை ஏலத்தில் வாங்க முன்வந்தார்.
எனினும், அந்த யுவதியை திருமணம் செய்துகொள்வதற்கும் அவர் விரும்பியதால் அதற்கு உடன்பட மறுத்து, ஏல உடன்பாட்டை மிஸ் ஸ்பிரிங் இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
தனது தாயின் வீட்டை அடகிலிருந்து மீட்பதற்காக தனது கன்னித்தன்மையை விற்பதற்கு முன்வந்ததாக அந்த யுவதி தெரிவித்துள்ளார்.
xlntgson Thursday, 26 August 2010 09:46 PM
கன்னி தன்மை ஏலம் விடும் வியாபாரம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. திருமணத்தோடு தொடர்பு படுத்தினால் அரபு நாடுகளை போல் இளம் பெண்கள் வயதான பணக்காரர்களை மணந்து அவர்களுக்கு 'சுகமான' மரணம் ஏற்பட உதவலாம். கொலை என்று உறுதிப்படாதவரை சொத்துகளில் மனைவிக்கு உரிய பங்கு கண்டிப்பாக கிடைக்கும். திருமணம் முடித்த சில காலங்களிலே ஷேக் இயற்கை மரணம் அடைந்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை. தடை செய்யப்படும் வரை இந்தியாவில் இளம்பெண்கள் ஒத்திக்கு கொடுக்கப்படுவது இருந்தது.இப்போதும் களவாக நடக்கிறதாம்.கன்னிகளுக்கு தான் நல்ல விலை!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
2 hours ago