2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கரடி பொம்மைகளின் பயணத்திற்காக சுற்றுலா நிறுவனம்

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியர் ஒருவர் தனது விற்பனையாளர் தொழிலை உதறிவிட்டு கரடிபொம்மைகளுக்கான சுற்றுலா முகவர் நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கொலோஞ் நகரைச் சேர்ந்த உல்ரிக் போம்லர் என்பவரே இந்த வேடிக்கையான தொழிலை ஆரம்பித்துள்ளார். கரடி பொம்மைகளுக்கான தனது  சுற்றுலா நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாகி உள்ளனர் என்கிறார் அவர்.

மேற்படி வாடிக்கையாளர்களின் கரடி பொம்மையை  பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் விடுமுறையைக் கழிப்பதற்காக கொண்டு செல்வதுதான் போம்லரின் தொழிலாகும்.

அவர், கரடி பொம்மைகளின் பயண அனுபவங்களை பதிவு செய்வதற்காக பிரபல்யமான இடங்களில் கரடி பொம்மைகளை வைத்து புகைப்படங்களை எடுத்துள்ளார்.

"இது பைத்தியத்தனமானது  போன்று இருக்கும்.  ஆனால் மக்கள் அந்த மென்மையான விளையாட்டுப் பொருட்களை அதிகமாக விரும்புகின்றார்கள். அவற்றுக்கு சிறந்தவற்றை வழங்க விரும்புகிறார்கள்" என்று போம்லர் விளக்கமளித்தார்.

"கரடி பொம்மைகளின் சுற்றுலாவின் போது நான் உடன் செல்வேன். அதைப்பார்த்து பலர்; சிரிப்பார்கள். எனினும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அவர்களின் கரடி பொம்மை மீது உண்மையான அன்பு வைத்துள்ளார்கள்" என்கிறார் அவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .