2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நாய்களுக்காக விசேட ஐஸ்கிறீம் விற்பனை வான்

Super User   / 2010 ஜூலை 19 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



நாய்களுக்காக விசேட ஐஸ்கிறீம் விற்பனை வான் ஒன்று பிரிட்டனில்  உருவாக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கான பல்வேறு விதமான ஐஸ்கிறீம்கள் இதில் விற்பைன செய்யப்படுகின்றன.

உலகின் நாய்களுக்கான முதலாவது ஐஸ்கிறீம் வான் இதுவாகும். பூமாராங் பெட்ஸ் பார்ட்டி எனும் நிறுவனமே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாய்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஐஸ்கிறீமின் பொருத்தமான கலவை, சுவை, வெப்பநிலை என்பன குறித்து விஞ்ஞானிகள் குழுவொன்று ஆய்வு மேற்கொண்டபின் இந்த ஐஸ்கிறீம்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம்.


ஓவ்வொரு வருடமும் பிரிட்டனில் நபரொருவர் சராசரியாக 50 ஐஸ்கிறீம்களை உட்கொள்கிறார். அவற்றில் அதிக எண்ணிக்கையானவை கோடைக்காலத்திலேயே உட்கொள்ளப்படுகிறது.  இம்முறை கோடைக்காலத்தில் மனிதர்களின் மிகச்சிறந்த நண்பனான நாய்களுக்கும் ஐஸ்கிறீம் தயாரிக்கத் திட்டமிட்டோம் என பூமாராங் பெட்ஸ் பார்ட்டி  நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.


 


You May Also Like

  Comments - 0

  • amjad Saturday, 24 July 2010 03:59 PM

    இப்படியும் ஒரு காலம் வந்துவிட்டது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .