2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

2​ஆம் தாரத்தை தயார் செய்யும் முதல் தாரம்

Mithuna   / 2023 டிசெம்பர் 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப உலகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. மக்களின் உணவு, உடை மற்றும் பழக்கவழக்கங்கள் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. இப்படி ஒருபுறம் உலகம் மாற்றத்தின் பாதையில் சென்றுக்கொண்டிருந்தாலும் சில சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மரபுகளை பின்பற்ற தவறுவதில்லை. 

இந்தியாவில் ஒரு திருமணம் மட்டுமே சட்டப்பூர்வமாக உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் உள்ள ராம்தேவ் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்துக்கொள்கின்றனர்.

பொதுவாக தனக்கு போட்டியாக இன்னொரு பெண் வந்தால் எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. ஆனால் இந்த கிராமத்தில், முதல் மனைவி தனது கணவனின் இரண்டாவது மனைவியை வரவேற்பதிலிருந்து திருமணத்துக்கு ​தேவையானதை தயாரிப்பது வரை, அனைத்தையும்  செய்கிறார்.

ஒரே ஆணை திருமணம் செய்துக்கொள்ளும் இந்த இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை போல வாழ்வார்கள் அவர்களுக்குள் சண்டையே வருவதில்லை என்று  அங்குள்ள மக்கள்  கூறுகின்றனர்

இப்படி வித்தியாசமான பழக்கம் மட்டுமன்றி அதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தையும் கூறுகின்றார்கள்.

 இந்த கிராமத்தை பொறுத்த வரை முதலில் திருமணம் செய்துக்கொள்ளும் பெண்ணுக்கு குழந்தை பிறக்காது என்பது ஐதீகம். அப்படியே குழந்தை பிறந்தாலும் அது பெண் குழந்தையாக தான் பிறக்கும் என்பதால் ஒவ்வொரு ஆணும் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

காலம் காலமாக இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தாலும் தற்போது இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வழக்கத்தை எதிர்க்க தொடங்கியுள்ளனர். மேலும் ஏழை பெண்களில் இயலாமையை சில ஆண்கள் தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .