2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

17 வயது சிறுவனுடன் உறவுகொண்ட ஆசிரியை நெருக்கடியில்

Kogilavani   / 2013 ஜூலை 11 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

17 வயது மாணவனுடன் உறவுகொண்ட குற்றச்சாட்டில் கைதான 27 வயது ஆசிரியர் நெருக்கடி நிலையை எதிர்கொண்ட சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

எப்பி ஸ்பரங் டோவ்சன் என்ற 27 வயது ஆசிரியையே நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இவ் ஆசிரியை 17 வயது மாணவனுடன் உறவுகொண்ட குற்றச்சாட்டில் கடந்த டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரது வழக்கு விசாரணை  ஸ்கொட்லாந்து நீதிமன்றில் எடுத்துகொள்ளப்பட்டபோது  மேற்படி ஆசிரியையும் மாணவனும் காரொன்றின் முன்னிருக்கையில் இருந்தவாறு உறவுகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது  மேற்படி இருவரையும் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆசிரியருக்கு சிறை தண்டனை விதிக்காமல் 6 மாத சமூக சேவையை தொடரவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, இவ் ஆசிரியை  பாலியல் குற்றவாளிகளுக்கான பதிவுப் புத்தகத்தில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு கையொப்பம் இடவேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ் ஆசிரியையின் செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆசிரியர் 4 தடவைகள் மனநல ஆலோசனைகளை பெற்றுள்ளதாக உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனூடாக அவருக்கு உளவியல் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • AMBI. Thursday, 25 July 2013 05:20 PM

    உலகம் ரொம்ப கெட்டு போச்சுங்கோ...!!!

    Reply : 0       0

    muh Wednesday, 31 July 2013 05:25 PM

    உலகம் கெட்டுபோகல, நாம கெட்டுப்போய்ட்டம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .