2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

17 மாதங்களுக்கு ஒருமுறை குழந்தை; 17ஆவது பிரசவத்துக்கும் நாள் குறிப்பு

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 23 ஆண்டுகளாக 17 மாதத்திற்கு ஒரு முறை ஒரு குழந்தை என இதுவரை 16 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

இங்கிலாந்து லங்காஷயரில் உள்ள மோர்கேம்பேவைச் சேர்ந்தவர் நோயல் (வயது 41). அவரது மனைவி சூ ராட்போர்ட் (வயது 38). இவ்விருவருக்கும் 16 குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் சூ தற்போது கர்ப்பமாக உள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு 17ஆவது பிரசவம் நடைபெறவுள்ளது.

சூ ராட்போர்ட், கடந்த 23 ஆண்டுகளாக 17 மாதத்திற்கு ஒரு முறை ஒரு குழந்தை பெற்று வருகிறார். அவர்களின் குடும்பத்தை வைத்து 15 கிட்ஸ் அன்ட் கவுன்ட்டிங் என்ற தலைப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆவணத் திரைப்படம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து அவர்கள் குடும்பம் பிரபலமானது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சூ தனது 16ஆவது குழந்தையான காஸ்பரை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் சூ தனது ஃபேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில், 'எங்களின் 17ஆவது குழந்தையை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

சூ10 மற்றும் நோயல் தங்களின் பேக்கரியில் பணிபுரிகின்றனர். அவர்கள் 9 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வசித்து வருகின்றனர். குடும்பத்துடன் எங்கு சென்றாலும் மினி பஸ்ஸில் தான் செல்வார்களாம்.




You May Also Like

  Comments - 0

  • hinasmohamed Tuesday, 01 October 2013 03:53 AM

    nalla waruviga

    Reply : 0       0

    sanofar Thursday, 17 October 2013 05:50 AM

    பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது, வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .