2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

15 இராத்தல் நிறைகொண்ட குழந்தை

Kogilavani   / 2013 மார்ச் 28 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண்ணொருவர் 16 மணித்தியால போராட்டத்தின் பின்னர் சுமார் 15 இராத்தல் நிறையுடைய குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

ரியான் கெங் என்ற 21 வயது பெண்ணே இவ்வாறு 15 இராத்தல் நிறையுடைய குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ஜோர்ஜ் கிங் என்றழைக்கப்படும் இக்குழந்தை பிறந்து 6 வாரங்களே ஆனாலும் தற்போது அக்குழந்தை 17 இராத்தல் நிறைகொண்டதாக 6 மாத குழந்தையின் தோற்றம் உடையதாக காணப்படுகின்றது.

பிரசவத்தின்போது இக்குழந்தையின் தோல்பட்டை பகுதி இருகி கொண்டதால் குழந்தையின் தாய் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டனில் உள்ள க்ளாஷ்டர்ஷியர் நகரில் மிக பருமன் மிக்க குழந்தையாக இக்குழந்தை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

சராசரி குழந்தையின் நிறையை விட இரண்டு மடங்கு நிறைகொண்டதாக இக்குழந்தை காணப்படுகின்றது.

தற்போது, இக்குழந்தை 2 அடி 2 அங்குல உயரம் கொண்டதாகவும் 17 இராத்தல் நிறைகொண்டதாகவும் காணப்படுகின்றது.

இதேவேளை, இக்குழந்தைக்கு ஆறு மாத குழந்தைகளின் ஆடையே பொருந்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .