Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸை சேர்ந்த இளைஞர் ஒருவர் 13 கிலோகிராம் (30 இறாத்தல்) நிறையுடைய கோல்ட் பிஷ் ரக மீனொன்றைப் பிடித்துள்ளார். மூன்று வயதுடைய சராசரி சிறுமியின் எடையை இம்மீன் கொண்டுள்ளது.
இதுவரை பிடிக்கப்பட்ட மிகப்பெரிய கோல்ட் பிஷ் ரக மீன்களில் ஒன்றாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பிரான்ஸின் தென் பகுதியிலுள்ள ஏரியொன்றிலிருந்து இந்த மீனை பிடித்த ரபாயெல் பியாகினி, இதுகுறித்து கூறுகையில், இந்த மீனை பிடிப்பதற்காக ஆறு வருடங்கள் காத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
'தூண்டிலின் இறுதியில் என்ன இருக்கும் என்பதை எங்களால் கூறமுடியாதிருந்தது. ஆனால், அந்த மீன் மிகவும் பெரியது என்று எங்களுக்குத் தெரியும்.
அந்த மீன் எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக இருந்தது. ஆனால், அதனால் வெற்றிபெற முடியவில்லை' என பியாகினி கூறியுள்ளார்.
இறுதியில், அந்த மீனுடன் படம் பிடித்துக்கொண்டபின் அவர் அந்த மீனை மீண்டும் தண்ணீரில் விட்டுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
2 hours ago