2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

12 வயதில் தாயான சிறுமி : இளவயதில் பாட்டியாகிய தாய்

George   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


லண்டனை சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் தனது 13 வயது காதலன் மூலம் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதை அடுத்து, பிரித்தானியா நாட்டில் இளம் வயதிலேயே பாட்டியான தகுதியை தனது 27 வயது தாயாருக்கு பெற்றுத் தந்துள்ளார்.

அங்குள்ள ஆரம்பநிலை பாடசாலையில் படித்து வரும் குறித்த சிறுமி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகியுள்ளதுடன் அதன் விளைவாக கர்ப்பமடைந்த நிலையில் கடந்த வாரம் குழந்தையை பிரசவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது மகளுக்கு பிறந்த குழந்தையுடனும், மகளுடனும், புகைப்படமொன்றில் தோன்றிய அந்த பெண்ணின் தாயார் (இளவயது பாட்டி) பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, தனது மகளின் உடல்நிலை தேறிய பின்னர் மீண்டும் பாடசாலைக்கு அனுப்பப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 




You May Also Like

  Comments - 0

  • MANIVANNAN Thursday, 28 August 2014 07:42 AM

    நல்ல வேகம்

    Reply : 0       0

    naflan Tuesday, 02 September 2014 01:02 PM

    அழகு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .