2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

116 வயதை வெற்றிகரமாக கொண்டாடிய ஜப்பான் பாட்டி

Kogilavani   / 2014 மார்ச் 09 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் அதிக வயதுடைய என்ற கின்னஸ் சாதனைக்கு உரித்தான  ஜப்பானை சேர்ந்த வயோதிப பெண் தனது  116 ஆவது பிறந்த தினத்தை அண்மையில் கேக் வெட்டி வெகுவிமர்சையாக கொண்டாடியுள்ளார்.

ஜப்பானின் மேற்கு பகுதியைச் சேர்ந்த மிஸ்ஸா ஒகவா என்ற மூதாட்டியே தனது 116 ஆவது வயதை இவ்வாறு தனியார் மருத்துவ மனையில் வைத்து கொண்டாடியுள்ளார்.

இதன்போது இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடை மற்றும் மலர்களிலான தலைப்பாகை அணிந்து இவர் தனது பிறந்த தின கேக்கை வெட்டியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவருக்கு பிறந்த தின பரிசாக மாநகர மேயர் பூங்கொத்து ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளார்.

'இவர் இன்னும் அழகான உடல்வாகுவுடனும் அதிக இடையுடனும் காணப்படுகின்றார' என தாதியர் இல்லத்தில் கடமையாற்றும் ஊழியர்கள்  தெரிவித்துள்ளனர்.

இவர் சுசி (ஒருவகை) என்ற உணவை மிகவும் விரும்பி உண்கிறார். நீண்ட ஆயளை பெறுவதற்கு நல்ல ஆரோக்கியமான உணவை தினமும் உண்ண வேண்டும், நன்கு ஓய்வெடுக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.  

இம்மூதாட்டி உலகில் அதிக வயதுடைய பெண் என்ற சாதனைக்கான சான்றிதழை கடந்த 2013 ஆண்டே பெற்றுகொண்டார்.

1898 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி பிறந்த இவர் 1919 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 3 பிள்ளைகளும் நான்கு பேரக் குழந்தைகளும் 6 பூட்டப்பிள்ளைகளும் உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0

  • jahan Saturday, 05 April 2014 07:04 PM

    antha thaaiku iraivan kudutha parisu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .