2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

10 மாதகால கணவர் உண்மையில் ஒரு பெண்; அதிர்ச்சியடைந்த மனைவி பொலிஸில் புகார்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிஷான் ஜீவக்க ஜயருக் -மாத்தறை)

மாத்தறையைச் சேர்ந்த 23 வயதான பெண்ணொருவர், தனது 'கணவர்'  உண்மையில் ஒரு பெண் என்பதை 10 மாதங்களின் பின்னர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்ததுடன் இது தொடர்பாக  பொலிஸில் புகார் செய்துள்ளார்.

ஆண் வேடமிட்டு ஏமாற்றியதாகக் கூறப்படும் குறித்த பெண்ணை தற்போது பொலிஸார் தேடி வருகின்றனர்.

அச்சந்தேக நபர் மாத்தறை திக்கெல்லையைச் சேர்ந்த 30 வயது பெண்ணாவார். அவர் தனது புகைப்படமொன்றை போட்டோஷொப் மூலம் ஆண் போன்று மாற்றிக்கொண்டு, பாதிக்கப்பட்ட யுவதிக்கு அனுப்பியதாகவும் தான் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவர் எனவும் அந்த யுவதியிடம் கூறியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த யுவதி கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி பெற்றோரின் சம்மதமின்றி சந்தேக நபரை திருமணம் செய்தாராம்.

ஆனால் சுமார் 10 மாதங்கள் வரை தனது கணவர் ஒரு பெண் என்பதை அவர் அறியாமல் இருந்தமைதான் ஆச்சரியமானது.

ஆனால், அண்மையில் ஒருநாள் தனது கணவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரின் சாரம் கழன்று விழுந்துவிட்டதாம். அப்போதுதான் தான் வாழ்க்கையில் மிக முக்கிய விசயங்களை இழந்திருப்பது மனைவிக்குத் தெரியவந்ததாம்.

 அதிர்ச்சியடைந்த அவர் , தனது பெற்றோருக்கு இது குறித்து தெரிவித்ததுடன் மாத்தறை காந்தர பொலிஸில் நிலையத்திலும் புகார் செய்துள்ளார்.

அதையடுத்து, ஆண் வேடமிட்டு கணவராக நடித்த  பெண் தலைமறைவாகியுள்ளார். அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

 
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 23 August 2010 09:02 PM

    10மாதம் என்ன செய்தார்களாம்? முதலிரவு என்பது பெயர்தான் முதலோ, 10 மாதம் சென்றுதான் வருமோ? கல்யாணத்தை எழுதி வைத்துக்கொள்வோம் பிறகு சேர்த்துவிடுவோம் என்கிற காகிதக் கல்யாணங்கள் அர்த்தமற்றவை. கல்யாணம் எழுதிய உடன் முதல் முகூர்த்தத்தில் சேர்த்துவிடும் பழமை சரியானது. நவீனம் கூட கூட இம்மாதிரியான கூத்துகள் கூடும், காவல் துறை என்ன செய்துவிடும்? வழக்கு போட்டால் எல்லார் மானமும் தானே போகும், அது சரி ஏன் இவ்வாறு இராணுவ பொலீஸ் பதவிகளுக்கு மோகம்? தெரிகிறதா எவ்வாறான பொருளாதாரம் எங்களது என்று அரசு ஊழியரோ அதிருப்தியில்?

    Reply : 0       0

    me 2 Tuesday, 24 August 2010 08:26 PM

    ulaham maarum kolam

    Reply : 0       0

    yaalaval Wednesday, 25 August 2010 01:35 AM

    எப்படி எப்படி எல்லாம் நிலைமை போகிறது. சமுக அறிவு காணாது ....

    Reply : 0       0

    shafi Sunday, 29 August 2010 03:22 PM

    லவ் போர் யு ஜோக் நோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .