2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மனைவியின் ஆசை: 90 வயதில் கணவர் மறுமணம்

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன  வயோதிபர் ஒருவர் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது 90 வயதில் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

சவூதி அரேபியாவின், மேற்கு பகுதியில் வசித்து வந்த படிக் அல் தகாபி  என்பவரே இவ்வாறு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

உடல்நலக் குறைப்பாடால் மரணப் படுக்கையில் இருந்த தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது பிள்ளைகளே முன்னின்று இத்திருமணத்தை நடத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருடைய மனைவி நீண்ட நாட்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு அண்மையில் காலமானார். மரணப்படுக்கையில் இருந்தப்போது, தனது கடைசி ஆசையாக 'தான் இறந்தப்பிறகு தனது கணவருக்கு கண்டிப்பாக மறுமணம் செய்துவைக்க வேண்டுமென' பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளார் இவரது மனைவி.

இதனையடுத்து இறக்கும் தருவாயில் தாய் கூறியதை நிறைவேற்றவேண்டுமென்ற எண்ணத்தில் தகாபியின் பிள்ளைகள் தகாபியின்  சமமதத்தை பெற்று அவருக்கு மணப்பெண் தேடும் செயற்பாட்டில் ஈடுபட்ட தொடங்கினர்.

இதனையடுத்து கணவனை இழந்த 53 வயது பெண் ஒருவரை வரதட்சணைக் கொடுத்து தங்கள் தந்தைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் பிள்ளைகள்.

உறவினர்கள் முன்னிலையில் மிக விமர்சையாக நடைபெற்றது அவர்களது திருமணம். தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம், தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக கூறி மனநிறைவு அடைந்துள்ளனர் தகாபியின் ஐந்து மகள்களும், ஏழு மகன்களும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .