2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி

Kogilavani   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



கணவருடன் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த 80 வயதான பெண்ணொருவர் தனது கணவர் விமானத்திலேயே மாரடைப்பினால் இறந்தநிலையில், பெரும் முயற்சியின் பின் சுயமாக விமானத்தை அவசரமாக தரையிறக்கிய சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

ஹெலன் கொலின்ஸ் என்ற பெண்ணே விஸ்கொன்ஸின் செறிலேன்ட் விமான நிலையத்தில் இவ்வாறு விமானத்தை  தரையிறக்கியுள்ளார்.

ஹெலன் கொலின்ஸ் மற்றும் அவரது கணவர் ஜோன் கொலின்ஸ் இருவரும் புளோரிடா மாநிலத்தில் விடுமுறையை கழித்துவிட்டு செஸ்னா ரக சிறிய விமானத்தில் வீடு திரும்பும் நிலையிலே விமானியான ஜோன் மாரடைப்பினால்  விமானத்திலே உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண் விமானத்தை மேலே கிளப்புவது மற்றும் தரையிறக்குவது குறித்த சொற்ப அறிவினை  30 வருடங்களுக்கு முன்னர் அவரின்  கணவர் மூலம்  பெற்றுக்கொண்டதாக அப்பெண்ணின் மகன் ஜேம்ஸ் கொலின்ஸ் தெரிவித்துள்ளார்.
பயிற்சி பெற்ற விமானியான ஜேம்ஸ் கொலின்ஸும் விமானத்தை தரையிறக்குவது குறித்து வானொலி மூலம் தனது தயாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாராம்.

விமானியான தனது கணவர் இறந்தமை குறித்து, ஹெலன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், உள்ளூர் விமானியான ரொபர்ட் வூக்செனவிக் மற்றுமொரு சிறிய விமானத்தில் சென்று ஹெலன் கொலின்ஸ்; செலுத்திய விமானத்தை தரையிறக்குவதற்கு உதவி செய்துள்ளார்.

தனது தாயார் விமானத்தை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக ஜேம்ஸ் கொலின்ஸ் தெரிவித்தார். 'தரையில் இருந்த அனைவரையும் விட அவர் அமைதியானவராக காணப்பட்டார்.  எனது தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டார் என்பதை நான் அறிவேன். தாயாரையும் நான் இழக்க விரும்பவில்லை.

ஒரு இயந்திரத்துடன் அவர் விமானத்தை தரையிறக்கியமை ஆச்சரியமானது. இப்படி செய்யக்கூடிய தேர்ச்சி பெற்ற அதிகம் உள்ளனரா என்பது தெரியவில்லை' என அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .