2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கற்புப் பட்டி திறந்து கிடந்ததால் மனைவியை தாக்கியவருக்கு 7 மாத சிறை

Kogilavani   / 2011 டிசெம்பர் 15 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் வெளியூருக்குச் செல்லும்போது மனைவியின் கற்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மனைவிக்கு 'கற்புப் பூட்டு' பொருத்தப்பட்ட பட்டியொன்றை அணிவித்து சென்ற நபர் ஒருவர், திரும்பிவந்தபோது அக் கற்புப் பூட்டு திறந்து இருந்ததை கண்டு அவரை கடுமையாக  தாக்கிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

இந்நபருக்கு மனைவியை தாக்கிய குற்றத்தற்காக 7 மாத சிறை தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தென்பகுதியில் உள்ள செங்குடு தொடர்மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்த ஹீ ஸென் (வயது 29) என்பவருக்கு இவ்வாறான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனைவி மீது சந்தேகம் கொண்ட ஹீ ஸென், பாலியல் உறவுகொள்வதைத் தடுக்கும் 'கற்புப் பட்டி' எனப்படும் இப்பட்டியை தான் வெளியூருக்கு செல்லும் போது மனைவியான ஸியாவோ டியானுக்கு  (வயது 20) அணிவித்து சென்றுள்ளார். 

ஓர் நாள் இரவு திரும்பி வந்து பார்த்தபோது ஸியாவோ  டியானிற்கு தான் அணிவித்து சென்ற கற்புப் பட்டி திறந்திருந்தமையை அவதானித்து ஹீ ஸென், ஆத்திரமடைந்து அவரை தாக்கியுள்ளார்.

ஆனால், உண்மை என்னவென்றால், ஹீ ஸென் அவசரத்தில் அப்பூட்டை ஒழுங்காக பூட்டாமல் சென்றுவிட்டாராம். திரும்பி வந்தபோது அது திறந்திருப்பதைக் கண்டு, அவர் மனைவியை சந்தேகப்பட்டுவிட்டார்.

'அவர் தொழிலை பெற்றுக்கொள்ளும் அவசரத்தில் கற்புப் பட்டியை முறையாக பூட்டாமல் சென்றுவிட்டார். ஆனால் யாரும் இதைப்போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டியதில்லை.  நான் ஒரு அடிமையில்லை.  இது உண்மையில் மிக மோசமானது' என்று நீதிபதியிடம் ஸியாவோ டியான் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • Rajisvaran Friday, 16 December 2011 06:52 PM

    மனைவியை சந்தேகப்படாதீர்கள்

    Reply : 0       0

    PUTTALA MANITHAN Sunday, 18 December 2011 09:08 AM

    இது நம் நாடான இலங்கையில் கிடைக்குமா ?

    Reply : 0       0

    ROSHANHILMEE Monday, 19 December 2011 02:31 AM

    ஐயோ ஐயோ நான் இதுவரையும் கருப்பு பெட்டியைத்தான் கேள்வி பட்டுஉள்ளேன் அய்யா. இப்போதுதான் கற்பு பட்டியை பற்றி கேள்வி படுகிறேன்.

    Reply : 0       0

    ROSHANHILMEE Monday, 19 December 2011 02:33 AM

    இலங்கையில் இந்த வியாபாரத்தை ஆரம்பித்தால் நல்ல இலாபம் சம்பாதிக்கலாம்.

    Reply : 0       0

    3 Roses Monday, 19 December 2011 08:56 PM

    மனித வாழ்க்கையைப் பொறுத்தவரையில் ஆண்களுக்குத்தான் இந்த கற்றுப் பட்டி மிகவும் அவசியமானது. அப்போது தான் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். பெண்கள் தவறு செய்தால் அகப்பட்டு விடுவார்கள். ஆனால் ஆண்கள் அப்படியல்ல. அதுவே ஆண்கள் தவறு செய்வதற்கும் சாதகமாக இருக்கின்றது. அதனால் அவர்களுக்கென்று கற்புப் பட்டிகளைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் அவர்களை தைரியமாக வெளியில் அனுப்ப முடியும்.

    Reply : 0       0

    JABEER Monday, 19 December 2011 10:37 PM

    இதை எப்படி போடுவது?

    Reply : 0       0

    ROSHANHILMEE Tuesday, 20 December 2011 11:09 PM

    ம்...ம்...ம்ம் என்ன ஜாபீர் சார் இன்னும் சின்ன பிள்ளையாகேவே இருக்கிகே. அந்தே 3 ரோசெஸ் கிட்டே கேட்டா சொல்லுவாகளே.

    Reply : 0       0

    PUTTALA MANITHAN Tuesday, 20 December 2011 11:10 PM

    ஜாபீர் இது உங்களுக்கு தெரியாதா? வாங்க சொல்லி தாரன்.

    Reply : 0       0

    ROSHANHILMEE Tuesday, 20 December 2011 11:11 PM

    இது எப்படி இருக்கும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .