Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது உடலின் பல பாகங்களில் உரோமங்கள் அடர்த்தியாக காணப்படுவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்பதற்காக தான் விஞ்ஞானியாக விரும்புவதாக 5 வயது சிறுமி கூறியிருக்கிறாள்.
சீனாவைச் சேர்ந்த, சியன் சியன் எனும் இந்தச் சிறுமி, தனது பாட்டியினுடைய வீட்டில் வசித்து வருகிறாள். அவள் தனது உடலில் உள்ள தேவையற்ற உரோமங்களை தினமும் சவரம் செய்து வருகிறாள்.
சியனுக்கு அண்மையில் காய்ச்சலும் வலிப்பும் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அப்போது அவளுடைய நிலைமையைப் பார்த்து மருத்துவர்கள் திகைப்படைந்தனர்.
இதைப் போன்று அவளது குடும்பத்தின் மூன்று சந்ததியில் யாருக்கும் இருந்ததில்லை. எனவே இது மரபு சார்ந்த நோய் அல்ல என மருத்துவர் சோ ஹொங்போ தெரிவித்திருக்கிறார்.
"அவளது அடர்த்தியான உரோமத்தை உற்றுப்பார்த்து நகர மக்கள் இவளுக்கு ஏன் நீண்ட உரோமம் உள்ளதென்று கேள்விக் கேட்கின்றனர்;. அதனால் அவளை நகருக்கு அழைத்துச் செல்வதில்லை" என்று அவளது தாத்தாவும் பாட்டியும் தெரிவித்துள்ளனர்
"பாலர் வகுப்பில்கூட ஒவ்வொரு நாள் காலையிலும் மக்கள் அவளை பார்த்துவிட்டு ஏன் அவள் அதிக உரோமத்துடன் காணப்படுகிறாள் என்று என்னிடம் கேள்வி எழுப்புவது எனக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது" என்று அவளது பாட்டி தெரிவித்தார்.
அந்த சிறுமியின் பெற்றோர் விவாகரத்துப் பெற்றவர்கள். அவளை கிராமத்தில் பாலர் வகுப்பிலுள்ள ஏனைய பிள்ளைகள் தன்னை கேலி செய்வதாகவும் அச்சிறுமி கூறி அழுதுள்ளாள்.
அவளை சிலர் மிகவும் குரூரமாக, குரங்குப் பெண்' என்ற பட்டப்பெயர் சொல்லி அழைக்கின்றனராம்.
ஆனால், அந்தச் சிறுமி மகிழ்ச்சியுடன் வீட்டில் இருக்கிறாள். 'நான் எனது தாத்தாவையும் பாட்டியையும் அதிகமாக விரும்புகின்றேன். முக்கியமாக, எனது பாட்டியை நேரிக்கிறேன். அவர்கள் எப்பொழுதும் என்னுடன் அன்பாக பழகுகின்றார்கள். நான் விஞ்ஞானியாக வேண்டும். விஞ்ஞானியாகிய பின் எனது உடலில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும்? என்று அந்தச் சிறுமி தெரிவித்துள்ளாள்.
xlntgson Thursday, 12 August 2010 09:46 PM
பாவம் இதுபோல் மிக சிறிய வயதிலே அதாவது எழு எட்டு வயதில் கூட பெண்குழந்தைகள் பூப்படைந்து விடுவதும் இந்த காலத்தில் நடக்கிறதாம். எங்கு பார்த்தாலும் இரசாயன பொருட்கள் முக்கியமாக குடிநீரிலும் உணவிலும் அதனால் ஒரு விதமான பதப்பொருள் இரத்தத்தில் கலந்து அவர்களது செயல்பாடு அதிகரித்து விடுகிறதாம். முதலில் கோழி இறைச்சியில் ஆரம்பித்து பலவிதமான சுவையூட்டிகளில் இந்த பதார்த்தம் இருக்கிறதாம். கோழிகள் சீக்கிரமாக முட்டையிட அல்லது பருவம் எய்த செய்யும் நவீன வியாபாரயுக்திகள் பிள்ளைகளை பெரியவர்களாக்குகிறது அர்த்தமற்ற முறை!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
2 hours ago