Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 16 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனிலுள்ள ஹோட்டலொன்று வாடிக்கையாளர்கள் தமது நாய்களையும் விருந்தினர்களாக அழைத்து வருவதற்கு அனுமதிக்கிறது.
வோர்செஸ்டர்ஷயர் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலுக்கு 'ரிட்ஸ் போர் ரோவர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
நாய்களுக்கும் 5 நட்சத்திர சேவைகளை வழங்குவதாக இந்த ஹோட்டல் அறிவித்துள்ளது.
சாதாரண அறைகளுடன் நாய்களுக்கான 3 விசேட அறைகள், பூங்காக்கள் போன்றவை இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
நாய்களுக்கான விசேட உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை நாய்கள் உணவு மண்டபத்திற்குச் சென்று சாப்பிடலாம். அல்லது தங்கியிருக்கும் அறைக்கும் உணவை கொண்டு வரச் செய்யலாம்.
நாய்களுக்கு விசேட சூப், சிக்கன் லிவர், கிரிப்பஸ், பிஷ்கேக், போன்றவற்றுடன் பிரதான உணவுகளான சிக்கன் சுப்ரீம், கரட் கேக் ரைஸ் புடிங் அல்லது சொக்கலெட் பிஸ்கட்ஸ் போன்ற உணவுகள் கிடைக்கும் என்கிறார் இந்த ஹோட்டலின் தலைமை சமையல் கலைஞரான ரிக்கோ பெசோ.
இவ்ஹோட்டலுக்கு புகழ் பெற்ற வி.ஐ.பிகள் பலரும் வாடிக்கையாளர்களாக உள்ளனராம்.
இந்த ஹோட்டலின் உரிமையாளரான டெபி சின்கிளயர் எனும் பெண் 7 நாய்களை வளர்த்து வருகிறாராம்.
riyas Sunday, 17 July 2011 12:52 PM
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகையை புரியவில்லை
Reply : 0 0
risimb Sunday, 17 July 2011 09:01 PM
உங்களது நாட்டில் இவைகளுக்குத்தான் மதிப்பு "அனுபவிக்கப் பிறந்த நாய்கள்"
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
40 minute ago