2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பிறந்தநாளுக்கு 4 கிலோ கிராம் தங்கச் சட்டை

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் பாரக் என்பவர் தனது 45அவது பிறந்த நாளுக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் (இந்திய ரூபாய்) மதிப்புள்ள தங்கச் சட்டையை வாங்கியுள்ளார்.
 
மும்பையில் இருந்து 260 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது இயோலா நகரம். அந்த நகரைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் பங்கஜ் பாரக். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர், சிறுவயதிலேயே ஜவுளித் தொழிலில் இறங்கி மிகக் குறுகிய காலத்தில் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார்.
 
பள்ளிப் பருவம் முதலே அவருக்கு தங்கத்தின் மீது தணியாத ஆசை. அதனால் எப்போதுமே சுமார் இரண்டு கிலோ அளவுக்கு தங்க நகைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தனது 45ஆவது பிறந்தநாளை இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடுகிறார். இதற்காக அவர் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்க சட்டையை வாங்கியுள்ளார்.
 
சுமார் 20 பொற்கொல்லர்களின் கைவண்ணத்தில் 3,200 மணி நேர உழைப்பில் இந்த தங்க சட்டை உருவாகியுள்ளது. இதன் மொத்த எடை 4 கிலோ கிராம் ஆகும்.
 
இதுகுறித்து தொழிலதிபர் பங்கஜ் பாரக் கூறியதாவது:
 
18 முதல் 22 கேரட் தங்கத்தில் சட்டை தைக்கப்பட்டுள்ளது. இதனை வழக்கமான சட்டை போன்று அணியலாம். சட்டையை துவைத்து உலர வைக்கலாம். ஒருவேளை சட்டை கிழிந்தாலோ, சேதமடைந்தாலோ சரிசெய்து கொடுக்க அதனை தயாரித்த ஜூவல்லரி நிர்வாகத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
 
புதிய சட்டை வாங்கியவுடன் அதை அணிந்து கொண்டு மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பங்கஜ் பாரக் வழிபட்டார். அப்போது அனைவரின் பார்வையும் அவர் மீது பதிந்தது. அவரைப் பார்க்க மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.
 
கடந்த ஆண்டு புணேவைச் சேர்ந்த தத்தா புகே என்பவர் ரூ.1 கோடியே 27 லட்சம் (இந்திய ரூபாய்) செலவில் தங்க சட்டை வாங்கி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த சாதனையை பங்கஜ் பாரக் இப்போது முறியடித்துள்ளார். அவரின் சாதனை கின்னஸ், லிம்கா சாதனை புத்தகங்களிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (தி ஹிந்து)



You May Also Like

  Comments - 0

  • Anand Friday, 08 August 2014 09:21 AM

    Super

    Reply : 0       0

    rajkani Friday, 08 August 2014 10:13 AM

    பொறாமை தான்... வேற ஒன்னுமில்ல...

    Reply : 0       0

    meyyappan Friday, 08 August 2014 03:07 PM

    ரொம்ப நல்லா இருக்கு

    Reply : 0       0

    sajith Friday, 08 August 2014 04:34 PM

    இதுக்கு என்ன டிடெர்ஜென்ட் பாவிப்பார்?

    Reply : 0       0

    kart Friday, 08 August 2014 07:48 PM

    நல்லா வருவிங்கடா..............

    Reply : 0       0

    m.aasaithambi Saturday, 09 August 2014 10:50 AM

    லட்சியம்

    Reply : 0       0

    Srini Saturday, 09 August 2014 11:02 AM

    ஆனாலும் சவரம் செய்ய காசு இல்லை...

    Reply : 0       0

    Karthik Saturday, 09 August 2014 12:21 PM

    சார் சட்ட சூப்பர், அதுல இருக்க பட்டன மட்டும் தாங்க‌

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .