2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஒரேவேளையில் 302 உள்ளாடைகளை அணிந்து உலக சாதனை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 21 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர், ஒரேவேளையில் 302 உள்ளாடைகளை அணிந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

53 வயதான  கெரி கிரெய்க் என்பவரே இப்புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரேவேளையில், 211 உள்ளாடைகளை அணிந்து சாதனை நிலைநாட்டியிருந்தார். ஆனால் இவ்வருட முற்பகுதியில், ஜெனின் கெப்லைஸ் எனும் பெண்ணொருவர் 252 உள்ளாடைகளை அணிந்து இவரது சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில் இந்த சாதனையை மீண்டும் முறியடிக்க வேண்டுமென்பதற்காக கிரெய்க் 302 உள்ளாடைகளை அணிந்து அப்பெண்ணின் சாதனையை முறியடித்து  புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

'இரண்டு தடவைகள் கின்னஸ் சாதனை புரிந்தவர் நானாக மட்டுமே இருக்க முடியும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் யாரும் இரண்டு தடவைகள் இதை செய்யும் அளவுக்கு முட்டாளாக இருக்கமாட்டார்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.

'இச் சாதனையை நிலைநாட்டும் தருவாயில் 1,000 இற்கும் மேற்பட்டோர் எனக்கு ஊக்கமளித்தனர். இந்த ஆடைகளை தயார்படுத்துவதில் எனது மனைவி ஜக்குலினும் எனக்கு பெரும் உதவியாக இருந்தார்' என அவர் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • arul Sunday, 23 September 2012 06:24 AM

    வேலை இல்லாதவர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .