2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

முன்பக்கத்தில் டொப்லெஸ் படங்கள் பிரசுரிப்பதை 28 வருடங்களின்பின் நிறுத்திய பத்திரிகை

Kogilavani   / 2012 மார்ச் 12 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 28 வருடங்களாக டொப்லெஸ் மொடல் அழகிகளின் அரை நிர்வாண படங்களை முன் பக்கத்தில் வெளியிட்டுவந்த ஜேர்மனியின் 'பிலிட்' பத்திரிகை இத்தகயை படங்களை முன்பக்கத்தில் பிரசுரிப்பதை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இவ்வாறான தீர்மானம் கடந்த மகளிர் தினத்தையொட்டி எடுக்கப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு இப்பத்திரிகை ஆரம்பித்தது முதல் இதுவரை 5,000 மொடல் அழகிகளின் அரை நிர்வாண படங்கள் முன்பக்கத்தில் பிரசுரித்துள்ளது.

எனினும் கடந்த 9 ஆம் திகதி வெளியான பத்திரிகையில் உள்ள அரைநிர்வாண பெண் 'நான் தான் கடைசி' எனக்கூறும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பார்வையில இது ஒரு சிறிய நகர்வாக  இருக்கலாம். ஆனால் இது பிலிட் பத்திரிகையையும் ஜேர்மனியை சேர்ந்த ஆண்களையும் பொருத்தவரை மிகப் பெரிய நடவடிக்கையாக காணப்படுகின்றது என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் பத்திரிகையின் உள் பக்கங்களில் இத்தகைய படங்கள் பிரசுரமாகும் என 'பில்ட்' தெரிவித்துள்ளது.

'எதிர்காலத்திலும் இப்பத்திரிகை கவர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதையதைவிட நவீன வழியில் சிறந்த முறையில் உட்புறமாக அது இருக்கலாம்' என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேற்படி தீர்மானத்தை ஜேர்மனியின் பவேரியன் பிராந்திய நீதியமைச்சர் பீட் மேர்க் வரவேற்றுள்ளார்.

ஆனால், அதே பத்திரிகையின் ஒரு பத்தியெழுத்தாளர் இத்தீர்மானத்திற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். 'பிலிட் பிரதம ஆசிரியருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதென நான் நினைக்கிறேன். அவர் எவ்வாறு எமது கனவு கன்னிகளை வெளியேற்ற முடியும்? என அப்பத்தி எழுத்தாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .